கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

யாருக்கிட்ட? உலக சாம்பியன்னா சும்மாவா? தென்னாப்பிரிக்காவை 276 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா சாதனை

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென்னாப்பிரிக்கா அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஒன்றுக்கு இரண்டு என்ற கணக்கில் தோற்ற நிலையில் ஒருநாள் தொடரை இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வென்றது.இந்த நிலையில் மூன்றாவது போட்டி சமீபிரதாய ஆட்டமாக மெக்காய் நகரில் இன்று தொடங்கியது. .

- Advertisement -

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய வீரர்கள் தென்னாப்பிரிக்காவின் பந்துவீச்சை சுளுக்கு எடுத்தனர். குறிப்பாக தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் 103 பந்துகளில் 142 ரன்கள் குவித்தார்.
இதேபோன்று மிட்செல் மார்ஸ் 106 பந்துகளில் சதம் அடித்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 250 ரன்கள் சேர்த்தது. இதன் அடுத்து களமிறங்கிய கேமரன் கிரீன் 47 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்.

ஆஸ்திரேலியா ரன் குவிப்பு:

தொடர்ந்து அதிரடி காட்டிய அவர் கடைசி வரை ஆட்டமடக்காமல் 55 பந்துகளில் 118 ரன்கள் சேர்த்தார்.
இறுதியில் அலெக்ஸ் காரி 37 பந்துகளில் 50 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 431 ரன்கள் குவித்தது. இதன் மூலம் ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலிய  அணி அடுத்த இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

இதனை அடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி இந்த இலக்கை எட்டி சாதனை படைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் ஆஸ்திரேலிய அணி இன்று அபாரமாக பந்து வீசி தென்ஆப்பிரிக்காவை சுளுக்கு எடுத்தது. தொடக்க வீரர் எய்டன் மார்க்கரம் இரண்டு ரன்களிலும்,ரியான் ரிக்கல்டன் 11 ரன்களும், கேப்டன் பவுமா 19 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து  ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

தென்னாப்பிரிக்கா படுதோல்வி

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிரிஸ்டன் ஸ்டெப்ஸ் 1 ரன்னில் ஆட்டம் இழக்க, டோனி டீ சொர்ஸி  33 ரன்கள் எடுத்தார்.ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் அதிரடி காட்டிய பிரவீஸ் ஐந்து சிக்சர்கள், இரண்டு பவுண்டரி எடுத்து 28 பந்துகளில் 49 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் தென்னாப்பிரிக்க அணி 24.5 ஓவர் முடிவில் 155 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதையும் படிங்க: 431/2.. நொறுக்கி தள்ளிய ஆஸி.. கிரீன் ஹெட் ஆடிய ருத்ர தாண்டவம்.. படைத்த பல சாதனைகள்.. தெ.ஆ பரிதாபம்

சிறப்பாக பந்து வீசிய ஆஸ்திரேலிய வீரர் கூப்பர் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.இதன் மூலம் 276 ரன்கள் வித்தியாசத்தில்  ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. தென்னாபிரிக்கா ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது இதுவே முதல் முறையாகும். ஆஸ்திரேலியாவை பொருத்தவரை அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இது இரண்டாவது முறையாகும்.

- Advertisement -
Published by