ரகானே 89 தாகூர் 51 அபாரத்தால் ஃபாலோ ஆண் தவிர்த்த இந்தியா – ஆஸ்திரேலியா 173 ரன்கள் முன்னிலை!

0
1090

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வருகிறது . இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலியா அணி 469 ரன்கள் ஆல் அவுட் ஆனது

அதனைத் தொடர்ந்து ஆடிய இந்தியா இரண்டாம் நாள் ஆட்ட நேரம் முடிவில் 151 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது . ஃபாலோ ஆணை இந்தியா தவிர்க்குமா என்ற கேள்வியும் ரசிகர்கள் மனதில் இருந்தது .

- Advertisement -

இந்நிலையில் இன்று காலை ஆட்டம் தொடங்கியதும் விக்கெட் கீப்பர் பரத் இரண்டு ரண்களில் கிளீன் போல்ட் ஆகி வெளியேறினார் . 151 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்து மிகவும் இக்கட்டான நிலையில் இருந்தது இந்தியா . அதன் பிறகு ஜோடி சேர்ந்த தாக்கூர் மற்றும் அஜிங்கிய ரகானே இருவரும் ஏழாவது விக்கெட்டுக்கு மிகச் சிறப்பாக ஆடினர் . அதிரடியாக ஆடி ரன் குவித்த இவர்கள் உணவு இடைவேளை வரை இந்திய அணிக்கு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர் .

இவர்களது அபாரமான ஆட்டத்தால் இந்தியா ஃபாலோ ஆணை சமன் செய்தது . நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தியாவின் டெஸ்ட் அணியில் இடம் பெற்றிருக்கும் அஜிங்கியா ரகானே மிகச் சிறப்பாக ஆடி 89 ரன்களில் ஆட்டம் இழந்தார் . சதம் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் உணவு இடைவேளைக்குப் பிறகு வீசப்பட்ட முதல் ஓவரிலேயே ஆட்டம் இழந்தார் . 129 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 11 பவுண்டரிகளுடன் 89 ரன்கள் எடுத்திருந்தார் . இவரும் சார்துல் தாகூர் இருவரும் இணைந்து ஏழாவது விக்கெட்டுக்கு 109 ரன்கள் சேர்த்தனர் . இந்திய வீரர்கள் இங்கிலாந்தில் ஏழாவது விக்கெட்க்கு அமைத்து அதிகபட்ச பார்ட்னர்ஷிப்புகளில் இது ஐந்தாவது இடம் வைக்கிறது.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் யாரும் சரியாக நின்று ஆடாததால் இந்தியா 296 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது . அஜிங்கிய ரகானே உடன் அபாரமாக ஆடிய தாகூர் 51 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார் . இதற்கு அவர் 108 பந்துகளை எடுத்துக் கொண்டார் . பந்துவீச்சாளர்களான உமேஷ் யாதவ் ஐந்து ரண்களிலும் முகமது சாமி பதிமூணு ரண்களிலும் ஆட்டம் இழக்க இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது .

- Advertisement -

இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி 173 ரன்கள் முன்னிலை பெற்றது . ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சில் கேப்டன் பேட் கமின்ஸ் மூன்று விக்கெட்டுகளையும் ஸ்டார்க், போலாண்ட் மற்றும் கிரீன் இரண்டு விக்கெட்டுகளையும் லியான் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார் .