உலக கிரிக்கெட்

இங்கிலாந்து தொடர்.. எதிர்கால ஆஸி அணி அறிவிப்பு.. புதிய கேப்டன்.. வார்னர் கோரிக்கை புறக்கணிப்பு.. அதிரடி வீரர் சேர்ப்பு

ஆஸ்திரேலியா அணி இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடுகிறது. இதற்கான ஆஸ்திரேலியா அணிகள் இன்று அறிவிக்கப்பட்டது. டி20 கிரிக்கெட்டில் கேப்டன் பொறுப்பு தரப்படாத பார்ட் கம்மின்ஸ் ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் பொறுப்பில் இருந்தும் ஓய்வு காரணமாக நகர்த்தப்பட்டு இருக்கிறார்.

- Advertisement -

ஆஸ்திரேலியா அணி முதலில் ஸ்காட்லாந்தில் செப்டம்பர் 4, 6 மற்றும் 7ம் தேதிகளில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் விளையாடுகிறது. இதற்கு அடுத்து இங்கிலாந்து அணிக்கு எதிராக செப்டம்பர் 13 ஆம் தேதி துவங்கும் டி20 தொடரில் விளையாடுகிறது. இதற்கு அடுத்து இங்கிலாந்து அணிக்கு எதிராகவே செப்டம்பர் 19ஆம் தேதி துவங்கும் ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் விளையாடுகிறது.

கடந்த மாதம் இறுதியில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலியா அணிக்கு மிட்சல் மார்ஸ் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். தற்போது இந்த சுற்றுப்பயணத்தில் முழுவதுமாக பாட் கம்மின்சுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கிறது. எனவே டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் என இரண்டு அணிகளுக்கும் மிச்சல் மார்ஸ் கேப்டனாக செயல்படுகிறார்.

மேலும் டேவிட் வார்னர் ஓய்வு பெற்றிருக்கின்ற காரணத்தினால் அவருடைய இடத்திற்கு ஜாக் பிரேசர் மெக்கர்க் கொண்டுவரப்படுகிறார். இத்தோடு கூப்பர் கோனோலி என்ற பினிஷருக்கு முதல்முறையாக ஆஸ்திரேலியா அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் வேட்டி மற்றும் ஆஸ்டன் அகர் இருவரும் தேர்வு செய்யப்படவில்லை. மேக்ஸ்வெல் மற்றும் ஸ்டார்க் இருவரும் டி20 தொடர்களில் விளையாட மாட்டார்கள். இத்தோடு ஆஸ்திரேலியா அணி தேர்வு செய்தால் டேவிட் வார்னர் விளையாட தயாராக இருப்பதாக கூறியிருந்தார். ஆனால் அவரை மேற்கொண்டு தேர்வு செய்யாமல் புறக்கணித்திருக்கிறார்கள்.

- Advertisement -

ஆஸ்திரேலியா டி20 அணி: மிட்செல் மார்ஷ் (கே), சேவியர் பார்ட்லெட், கூப்பர் கோனோலி, டிம் டேவிட், நாதன் எல்லிஸ், ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க், கேமரூன் கிரீன், ஆரோன் ஹார்டி, ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், ஸ்பென்சர் ஜான்சன், மார்கஸ் ஸ்டோனிஸ் மற்றும் ஆடம் ஜாம்பா.

இதையும் படிங்க : 176 ரன்கள்.. கான்வே பிளேசிஸ் அதிரடி.. டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணியை வீழ்த்தியது

ஆஸ்திரேலிய ஒருநாள் அணி: மிட்ச் மார்ஷ் (கே), சீன் அபோட், அலெக்ஸ் கேரி, நாதன் எல்லிஸ், ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க், கேமரூன் கிரீன், ஆரோன் ஹார்டி, ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மார்னஸ் லபுசேன், கிளென் மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், மேத்யூ ஷார்ட், மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஆடம் ஜாம்பா.

- Advertisement -
Published by

Recent Posts