உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் பங்கேற்கும் ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு! – இந்தியாவுக்கு ஐபிஎல் தான் முக்கியமா?

0
552

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் பங்கேற்கும் ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா வீரர்களின் விவரங்களை கீழே காண்போம்.

2021-2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் லீக் தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்கள் பிடித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருக்கின்றன. இரு அணிகளுக்கும் இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.

- Advertisement -

வருகிற ஜூன் 7ஆம் தேதி துவங்கி 11ஆம் தேதி வரை நடைபெறும் இப்போட்டியில் பங்கேற்கும் ஆஸ்திரேலியா அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலை முடித்துவிட்டு, ஆஸ்திரேலியா அணி அங்கேயே தங்கி ஆஷஸ் தொடரிலும் விளையாடுகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான அணியும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் மற்றும் ஆஷஸ் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி:

பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், மார்கஸ் ஹாரிஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லியோன், மிட்செல் மார்ஷ், , மேத்யூ ரென்ஷா, ஸ்டீவ் ஸ்மித் (துணை கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், டேவிட் வார்னர்.

- Advertisement -

மிட்ச்சல் மார்ஷ், ஜோஸ் இங்கிலிஷ், மார்கஸ் ஹாரிஸ் மூவரும் மீண்டும் ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்துள்ளனர். மார்ஷ், கடந்த ஓராண்டாகவே காயம் காரணமாக அவதிப்பட்டு வந்தார். குணமடைந்து வந்து ஒருநாள் தொடரில் அபாரமாக செயல்பட்டதால் டெஸ்ட் அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

17 பேர் கொண்ட இந்த அணியில் அணியில் நான்கு ஸ்பெஷலிஸ்ட் வேகபந்துவீச்சாளர்கள் உள்ளனர் – கேப்டன் பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் ஸ்காட் போலண்ட்.

ஆல்ரவுண்டர்கள் வரிசையில் கேமரூன் கிரீன் மற்றும் மிட்ச்சல் மார்ஷ் இருவரும், சுழல் ஜோடி நாதன் லயன் மற்றும் டோட் மர்பி இருவரும் இருக்கின்றனர்.