“ஆஸ்திரேலியா சிறந்த அணி இல்லை?.. எதார்த்தத்தை விட்டு ஓடக்கூடாது!” – கம்பீர் அதிரடியான ஸ்டேட்மென்ட்!

0
821
Gambhir

நடந்து முடிந்த 13வது ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் விளையாடிய இந்தியா அணிதான் இதுவரையிலான உலகக் கோப்பைகளில் விளையாடிய சிறந்த இந்திய அணி என்று பலராலும் கூறப்பட்டு வருகிறது.

இந்த இந்திய அணி நடந்து முடிந்த உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக 10 போட்டிகளை வென்று இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வி அடைந்து கோப்பையை இழந்தது.

- Advertisement -

எனவே இந்த காரணத்தால் இந்திய அணியே சிறந்தது ஆஸ்திரேலியா அணி இந்திய அணியை விட சிறந்தது கிடையாது என்பதான கருத்துக்கள் பேசப்பட்டு வருகின்றன.

ஆஸ்திரேலியா அணி உலகக் கோப்பையில் முதல் இரண்டு ஆட்டங்களில் தோற்றாலும் கூட கடைசி எட்டு ஆட்டங்களில் வென்று இருக்கிறது. இறுதிப் போட்டியோடு சேர்த்து மொத்தம் ஒன்பது போட்டிகளை வென்றது.

- Advertisement -

இந்த நிலையில் இந்த கருத்துக்கள் குறித்து பேசி உள்ள கம்பீர் கூறும் பொழுது “பலருக்கும் இது பிடிக்காமலே ஒன்றாக இருக்கலாம். சிறந்த அணி உலக கோப்பையை வெல்லவில்லை என்று சில நிபுணர்கள் கூறுவதை நான் கேள்விப்பட்டேன். இது முற்றிலும் உண்மை கிடையாது. வினோதமான அறிக்கைகளில் இதுவும் ஒன்று. உலகக் கோப்பையை வென்ற அணிதான் சிறந்த அணி. இதுதான் நேர்மையான பதில்.

இந்தியா 10 போட்டிகளில் தொடர்ச்சியாக வென்று நன்றாக இருந்தது. எனவே அந்த அணி ஃபேவரைட் ஆன அணியாக இருந்தது. ஆனால் ஆஸ்திரேலியாவும் முதல் இரண்டு ஆட்டங்களில் தோற்றது, அதே சமயத்தில் தொடர்ச்சியாக 8 போட்டிகளில் வெற்றி பெற்றது.

இதை வைத்து லீக் சுற்றில் சிறப்பாக விளையாடிய அணி தான் சிறந்த அணி கோப்பையை வென்றாக வேண்டும் என்று கூற முடியாது. லீக் சுற்று வேறு நாக் அவுட் சுற்று வேறு. நீங்கள் புள்ளி பட்டியலில் முதலில் இரண்டாவது இடத்தை பிடித்தீர்களா நான்காவது இடத்தை பிடித்தீர்களா என்பது பேச்சு கிடையாது.

எட்டு லீக் ஆட்டங்களில் ஆறில் வெற்றி பெறுவது எளிமையான காரியம். அதே சமயத்தில் இரண்டு நாக் அவுட் போட்டிகளில் நீங்கள் இரண்டையும் வெல்வது என்பது கடினமான காரியம். சிறந்த அணியே உலகக் கோப்பையை வென்றுள்ளது என்பதை ஏற்றுக் கொள்வோம். இந்தியா சரியாக விளையாடவில்லை. இந்த யதார்த்தத்தை விட்டு ஓடி விடக்கூடாது!” என்று கூறியிருக்கிறார்!

- Advertisement -