AUSvsWI.. 100வது போட்டியில் வார்னர் வெறித்தனம்.. 87 ரன்னுக்கு 8 விக்கெட்.. பரபரப்பான போட்டியின் முடிவு

0
1084
Warner

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் வெஸ்ட் இண்டிஸ் ஆண்கள் கிரிக்கெட் அணி முதலில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஒன்றுக்கு ஒன்று என சமன் செய்தது.

இதற்கு அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மூன்று போட்டிகளையும் தோற்று தொடரை இழந்தது.

- Advertisement -

தற்பொழுது ரோமன் பவல் தலைமையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடுகிறது.

இந்தத் தொடரின் முதல் போட்டி இன்று நடைபெற டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது. ஒரு நாள் மட்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் நகர்ந்து கொண்ட டேவிட் வார்னர் டி20 கிரிக்கெட்டுக்கு மீண்டும் வந்திருக்கிறார். இன்று அவருக்கு நூறாவது சர்வதேச டி20 போட்டியாக அமைந்தது.

முதலில் இருந்தே அதிரடியில் ஈடுபட்ட டேவிட் வார்னர் அட்டகாசப்படுத்தினார். 22 பந்தில் தனது அரை சதத்தை கடந்தார். தொடர்ந்து விளையாடிய டேவிட் வார்னர் 36 பந்துகளில் 12 பவுண்டரி 1 சிக்ஸர் உடன் 70 ரன்கள் எடுத்து, 194 ஸ்ட்ரைக் ரேட்டில் வெறித்தனமாக விளையாடி வெளியேறினார்.

- Advertisement -

இதற்கு அடுத்து ஆஸ்திரேலியாவின் ஜோஸ் இங்லீஷ் 39(25), டிம் டேவிட் 37(17), மேத்யூ வேட் 21(14) என அதிரடியாக ரன்கள் எடுக்க 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 213 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரசல் 3 விக்கெட் கைப்பற்றினார்.

இதற்கு அடுத்து வெஸ்ட் இண்டீஸ் ரன் துரத்தலை மிகச் சிறப்பாக ஆரம்பித்தது. முதல் விக்கெட்டுக்கு 8.3 ஓவரில் 89 பார்ட்னர்ஷிப் வந்தது. சார்லஸ் 25 பந்தில் 42 ரன்கள், பிரண்டன் கிங் 37 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.

ஒரு கட்டத்தில் வெஸ்ட் இண்டிஸ் அணி 115 ரன்களுக்கு இரண்டு மட்டுமே இழந்திருந்தது. மிகச் சுலபமாக வெற்றி பெறும் நிலையில் இருந்து மேற்கொண்டு 87 ரன்களுக்கு எட்டு விக்கெட்டை இழந்து 202 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட் ஆனது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 27 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஜேசன் ஹோல்டர் 15 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 11 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

நிக்கோலஸ் பூரன் 18, ரோமன் பவல் 14, ஷாய் ஹோப் 16, இறுதியில் ஜேசன் ஹோல்டர் அதிரடியாக 15 பந்தில் 34 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் ஆடம் ஜாம்பா மூன்று விக்கெட் கைப்பற்றினார்.