இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பும்ராவை சமாளிப்பது மிகவும் சிரமமான காரியம் என ஆஸ்திரேலிய பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் கூறியிருக்கிறார்.
ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் பெர்த் மைதானத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஆச்சரியப்படுத்தியது. இந்த தோல்வி ஆஸ்திரேலியா அணி எதிர் பார்க்காத ஒன்றாகவே அமைந்திருக்கிறது.
ஆஸ்திரேலியாவின் ஆச்சரியத்திற்கான காரணம்
இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா, கில், ஷமி மற்றும் புஜாரா என முன்னணி வீரர்கள் இல்லை. மேலும் இந்திய அணி சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒயிட் வாஸ் ஆகி ஆஸ்திரேலியா வந்தது. இதன் காரணத்தால் இந்திய அணியின் தன்னம்பிக்கை மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது.
எனவே இந்த இந்திய அணியை ஆஸ்திரேலிய மண்ணில் வெல்வது தங்களுக்கு மிகவும் எளிதாக இருக்கும் என ஆஸ்திரேலியா கணக்கு போட்டது. மேலும் எப்பொழுதும் இல்லாத வகையில் டெஸ்ட் தொடரை அதிவேக பெர்த் மைதானத்தில் இருந்து ஆரம்பித்தது. இப்படி எல்லாம் சாதகமாக இருந்தும் ஆஸ்திரேலியா அணி தோல்வி அடைந்தது மட்டுமில்லாமல் அது படுதோல்வியாக அமைந்ததில் அதிர்ச்சி அடைந்திருக்கிறது என்றே கூறலாம். இதில் பும்ராவை எதிர்கொள்வதில் மொத்த ஆஸ்திரேலியா அணியும் தடுமாறியது குறிப்பிடத்தக்கது.
பும்ராவை சமாளிப்பது கடினம்
இது குறித்து ஆஸ்திரேலியா தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் கூறும்பொழுது “எங்களுடைய தயாரிப்பில் நாங்கள் எப்பொழுதும் மறைமுகமாக சிறப்பாக இருக்கிறோம். நாங்கள் எங்களுடைய ரிலீஸ் பாயிண்ட் மற்றும் பாதைகள்ஆகியவற்றை மறைக்கிறோம். ஆனால் பும்ராவை நகலெடுத்து செயல்படுவது என்பது மிகவும் கடினமான ஒன்று”
இதையும் படிங்க : வெறும் 18 ஓவர்.. அயூப் 53 பந்து மேஜிக்.. ஜிம்பாப்வேயை வீழ்த்திய பாகிஸ்தான் அணி.. ODI தொடர் தற்காலிக சமன்
“அவரிடம் இரண்டு பேர் ஸ்லிப்பில் இருப்பது போல யாரும் இல்லை. ஆனால் அவர் ஸ்லிப்பில் அவுட் செய்வது போல சாதாரணமாக செய்கிறார். நாங்கள் அதற்கு ஏதாவது செய்வதற்கு கடுமையாக முயற்சி செய்கிறோம். அதற்காக நாங்கள் பயிற்சியும் செய்கிறோம். ஆனால் களத்தில் எங்களால் அவரை சமாளிக்க முடியவில்லை. தற்போதுபெரிய சவால் என்னவென்றால் பும்ராவுக்கு எதிராக நாங்கள் எப்படி ரன்கள் எடுக்கப் போகிறோம்?” என்பதுதான் என்று கூறி இருக்கிறார்.






