ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ஒரு குறிப்பிட்ட வீரர் இடம்பெறாதது இந்திய அணிக்கு பெரிய நஷ்டம் என ஆஸ்திரேலிய பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் கூறியிருக்கிறார்.
மேலும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடைபெற இருக்கும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா அணியின் துவக்க ஆட்டக்காரருக்கான தேர்வில் யார் முன்னிலையில் இருக்கிறார்கள் என்பது குறித்தும் சூசகமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
தற்போது ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமியின் பெயர் இடம் பெறவில்லை. அவர் சர்வதேச போட்டி விளையாடும் அளவுக்கு இன்னும் உடல் தகுதியை ஏற்கவில்லை என்று தெரிகிறது.
அதே சமயத்தில் தற்போது நல்ல பேட்டிங் ஃபார்மில் உள்நாட்டு கிரிக்கெட்டில் இருந்து வரும் புஜாராவை ஆஸ்திரேலிய தொடரில் சேர்க்க வேண்டும் என வெளியில் இருந்து நிறைய கோரிக்கைகள் வந்திருந்தது. இந்தியத் தேர்வுக் குழுவால் இந்த கோரிக்கையும் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. தற்போது இளம் வீரர்களை அதிகம் நம்பிய அணியாக இந்திய அணி இருக்கிறது.
இதுகுறித்து பேசி இருக்கும் ஆஸ்திரேலியா பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு கூறும்பொழுது “முகமது ஷமி இல்லாதது இந்திய அணிக்கு ஒரு பெரிய இழப்பு. அவருடைய போராடும் இடைவிடாத இயல்பு மற்றும் அவருடைய லைன் அண்ட் லென்த், தொழில்முறை கிரிக்கெட்டராக அவருடைய சிறப்பு ஆகியவற்றை எங்கள் வீரர்கள் பேசுகிறார்கள். மேலும் அவர் பும்ராவுடன் இணைந்து சிறந்த முறையில் பார்ட்னர்ஷிப் அமைத்து வந்தார். தற்போதுஇந்திய அணிக்கு ஒன்று இரண்டு காம்போ கிடைக்கவில்லை. எனவே இதை அவர்கள் தவற விடுகிறார்கள்”
இதையும் படிங்க : ஆஸி ODI டி20.. பாகிஸ்தான் அணிகள் அறிவிப்பு.. கேப்டன் விஷயத்தில் சுவாரசிய முடிவு.. 3 ஸ்டார் வீரர்கள் வருகை
“சமயத்தில் கடந்த முறை இளம் வீரர்களைக் கொண்டு அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை நாங்கள் மறக்கவில்லை. அவர்களை நாங்கள் எளிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தற்போது துவக்க வீரருக்கான இடத்தில் உள்நாட்டு கிரிக்கெட்டில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் சாம் கான்டினஸ் முக்கியமானவராக இருக்கிறார். ஒருவரிடம் திறமை இருக்கும் என்றால் அவரை நேரடியாக அணியில் சேர்ப்பது பிரச்சனை கிடையாது” என்று கூறியிருக்கிறார்.