ஆஸ்திரேலியா அணியின் துணை பயிற்சியாளர் டேனியல் வெட்டேரி தென் ஆப்பிரிக்க அணியை தற்போதும் ஆஸ்திரேலியா அணியால் வென்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை கைப்பற்ற முடியும் என கூறியிருக்கிறார்.
தற்போது மூன்றாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் பெண் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே சில நாட்களுக்கு முன்பாக துவங்கி நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்க அணிக்கு 282 ரன்கள் இலக்கை நிர்வகித்தது. இதை நோக்கி விளையாடி வரும் தென் ஆப்பிரிக்க அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்திருக்கிறது. அந்த அணியின் வெற்றிக்கு கைவசம் எட்டு விக்கெட்டுகள் இருக்க 69 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது.
மிகச் சிறப்பாக விளையாடிய மார்க்ரம் சதத்துடனும், கேப்டன் பவுமா அரை சதத்துடனும் ஆட்டம் இழக்காமல் களத்தில் நிற்கிறார்கள். இந்த கூட்டணி மிகச் சிறப்பாக விளையாடிய 234 பந்துகளைச் சந்தித்து 143 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை எளிதாக்கி வைத்திருக்கிறது. ஆனால் இந்த நிலையில் இருந்தும் ஆஸ்திரேலியா அணியாள் வெல்ல முடியும் என அந்த அணியின் துணை பயிற்சியாளர் டேனியல் வெட்டேரி கூறி இருக்கிறார்.
இதுகுறித்து டேனியல் வெட்டேரி பேசும்பொழுது “நம்மை விட முன்னேறி செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்காது என்று நம்புகிறேன். இந்த போட்டியில் எல்லாமே ஒரே ஒரு விக்கெட்டை கைப்பற்றுவதில்தான் இருக்கிறது. இதுதான் தொடக்க புள்ளியாக அமையும். தற்போது விளையாடி வரும் இருவரும் மிகுந்த கட்டுப்பாட்டுடன் இருக்கிறார்கள்”
இதையும் படிங்க : WTC பைனல் கம்மின்ஸ் கேப்டன்சி மோசம்.. இந்தியாவை பார்த்து திருந்தி இருக்கலாம் – டேல் ஸ்டெய்ன் விமர்சனம்
“எனவே இங்கிருந்து ஒரு புதிய பேட்ஸ்மேன் நாம் கிரீஸில் விளையாடுவதற்கு கொண்டு வந்தால், அதுவே நமக்கு தொடக்கமாக அமையும். நிச்சயமாக இந்த போட்டியில் எட்டு விக்கெட்டுகளை கைப்பற்றுவது பேச்சு கிடையாது. ஒரு விக்கெட்டை கைப்பற்றுவதுதான் முக்கியம். மேற்கொண்டு அங்கிருந்து நம்மால் என்ன செய்ய முடிகிறது என்பதுதான் விஷயம்” என்று கூறியிருக்கிறார்.