இந்திய அணிக்கு எதிரான ODI தொடர் ஆஸி அணி அறிவிப்பு.. முக்கிய வீரர் இல்லை.. நட்சத்திர வீரர்கள் இடம்பெறுகிறார்கள்!

0
4399
Australia

இந்திய அணி தற்பொழுது ஆசியக் கோப்பை தொடரை முடித்துக் கொண்டு, நேராக இங்கிருந்து பஞ்சாப் மாநிலம் மொகாலி மைதானத்தில் முகாம் இட்டு இருக்கிறது.

இவ்வளவு வேகமாக இந்திய அணி நகர்ந்திருப்பதற்கான முக்கிய காரணம், இந்திய அணி அடுத்து ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக உள்நாட்டில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது.

- Advertisement -

இந்தியாவில் உலகக்கோப்பை துவங்குவதற்கு முன்பாக பலம் பொருந்திய இரண்டு அணிகள் மோதிக் கொள்வது, இரண்டு அணிகளும் தங்களுடைய பலம் மற்றும் பலவீனங்களை மிகச் சரியாக சோதித்துக் கொள்வதற்கான ஒரு களமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 22, 24 மற்றும் 27 ஆகிய மூன்று நாட்களில் நடைபெறுகிறது. பஞ்சாப், இந்தூர், ராஜ்கோட் ஆகிய மூன்று மைதானங்களில் நடத்தப்படுகிறது.

ஆஸ்திரேலியா அணி நேற்று 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை தென் ஆப்பிரிக்க மண்ணில் அந்த அணியிடம் 2-3 என இழந்திருக்கிறது. தற்பொழுது அவர்கள் அங்கிருந்து நேராக இந்தியா வருகிறார்கள்.

- Advertisement -

தென் ஆப்பிரிக்க தொடரில் ஆஸ்திரேலியா அணியின் முக்கிய வீரர்களான கேப்டன் பேட் கம்மின்ஸ், ஸ்மித், மிட்சல் ஸ்டார்க், கிளன் மேக்ஸ்வெல் ஆகியோர் காயத்தின் காரணமாக இடம்பெறவில்லை.

இந்த நிலையில் இந்திய அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இந்த நட்சத்திர வீரர்கள் அனைவரும் அணிக்கு திரும்ப வந்திருக்கிறார்கள். உலகக் கோப்பை ஆஸ்திரேலியா அணியில் இடம்பெறாத மார்னஸ் லபுசேன் இந்த அணியில் ஆச்சரியமாக இடம் பெற்றிருக்கிறார்.

மிக முக்கியமாக தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியின் போது கையில் பந்து தாக்கி காயமடைந்த ஆஸ்திரேலியாவின் அதிரடி வீரர் டிராவிஸ் ஹெட் இடம்பெறவில்லை. அவர் முதல் பாதி உலகக்கோப்பை போட்டிகளுக்கு கிடைக்க மாட்டார் என்று கூறப்படுகிறது.

இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி :

பாட் கம்மின்ஸ் (கே), சீன் அபோட், அலெக்ஸ் கேரி, நாதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், ஜோஷ் இங்கிலிஸ், ஸ்பென்சர் ஜான்சன், மார்னஸ் லாபுஷாக்னே, மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், தன்வீர் சங்கா, மாட் ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோனிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஜம்பா.