ஆஸி டி20 சீரிஸ்.. இந்திய அணி அறிவிப்பு.. சாம்சனுக்கு இடமில்லை.. ருதுராஜ்க்கு பொறுப்பு!

0
6727
Surya

13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற்று நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இதற்கு அடுத்து உலகக் கிரிக்கெட்டில் அடுத்தடுத்த தொடர்கள் நிறைய அணிகளுக்கு நடக்க இருக்கின்றன.

இந்த வகையில் இந்திய அணி ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடுகிறது. இந்த தொடரில் இந்திய அணியில் சூரியகுமார் தவிர மற்ற எல்லோருக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

இதேபோல் ஆஸ்திரேலியா தரப்பிலும் இளம் வீரர்கள் கொண்ட அணியே விளையாடும் என்று தெரிகிறது. உலகக்கோப்பை வென்ற ஆஸ்திரேலியா நட்சத்திர வீரர்கள் நாடு திரும்புகிறார்கள்.

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெறும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி வருகின்ற நவம்பர் 23ஆம் தேதி நடைபெறுகிறது. கடைசி மற்றும் ஐந்தாவது டி20 போட்டி டிசம்பர் மூன்றாம் தேதி நடக்கிறது.

இந்தத் தொடருக்கு இந்திய அணிக்கு சூரியகுமார் யாதவ் கேப்டனாக அறிவிக்கப்பட்டிருக்கிறார். மேலும் ருதுராஜ் துணை கேப்டனாக தொடர்கிறார்.

- Advertisement -

அறிவிக்கப்பட்டுள்ள இந்த அணியில் சஞ்சு சாம்சனுக்கு இடம் கொடுக்கப்படவில்லை. அவர் குறித்து இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு என்ன முடிவில் இருக்கிறது என்று தெரியவில்லை. தொடர்ச்சியாக அவர் இந்திய அணியில் புறக்கணிக்கப்பட்டுக் கொண்டே வருகிறார்.

முற்றிலும் இளம் வீரர்களைக் கொண்ட இந்த அணியில் வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல் மற்றும் ரவி பிஸ்னோய் மூவரும் சுழற் பந்துவீச்சாளர்களாக இருக்கிறார்கள்.

ஐந்து டி20 போட்டிகள் கொண்ட ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணி:

சூரியகுமார் யாதவ், ருதுராஜ், இசான் கிஷான், திலக் வர்மா, ரிங்கு சிங் ஜிதேஷ் ஷர்மா, ஜெய்ஸ்வால், வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், சிவம் துபே, ரவி பிஸ்னோய், அர்ஸ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, ஆவேஷ் கான் மற்றும் முகேஷ் குமார்.