ஆஸி 6 கேட்ச் மிஸ்.. அடித்து நொறுக்கிய சவுத் ஆப்பிரிக்கா.. செமி பைனல் வாய்ப்பு சிக்கல்!

0
963
Cummins

இன்று உலகக்கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் உத்தரப்பிரதேசம் லக்னோ மைதானத்தில் விளையாடி வருகின்றன!

தென் ஆப்பிரிக்கா முதல் ஆட்டத்தில் இலங்கையை அபாரமாக வீழ்த்தி இருந்தது. ஆஸ்திரேலியா முதல் ஆட்டத்தில் இந்திய அணியிடம் தோல்வி அடைந்து இருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் இந்தப் போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆடுகளம் கொஞ்சம் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் வகையில் இருந்தது.

தென் ஆப்பிரிக்கா முதல் விக்கெட்டுக்கு 108 ரன்கள் சேர்த்த நிலையில் கேப்டன் டெம்பா பவுமா 55 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். சிறப்பாக விளையாடிய குயிண்டன் டி காக் இந்த போட்டியிலும் 90 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். 106 பந்துகளை சந்தித்த அவர் எட்டு பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்ஸர்கள் உடன் 109 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இதற்கு அடுத்து வாண்டர் டேசன் 26, மார்க்ரம் 56, கிளாசன் 29, டேவிட் மில்லர் 17, மார்க்கோ யான்சன் 26 ரன்கள் எடுக்க 50 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி ஏழு விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் எடுத்திருக்கிறது.

- Advertisement -

மிகச் சிறப்பாக பந்து வீசிய ஆஸ்திரேலிய கிளன் மேக்ஸ்வெல் பத்து ஓவர்களுக்கு ஒரு மெய்டன் செய்து 34 ரன்கள் மட்டும் தந்து இரண்டு விக்கெட் கைப்பற்றி அசத்தினார். ஸ்டார்க் இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

இந்த போட்டியில் டெம்பா பவுமாவுக்கு ஆடம் ஜாம்பா, சீன் அப்பாட், ஜோஸ் இங்கிலீஷ் மூன்று பேர் கேட்ச்சை தவறவிட்டனர். மார்க்ரமுக்கு கம்மின்ஸ் தவறவிட்டார். யான்சென்னுக்கு ஸ்டார்க் மற்றும் ஸ்டாய்னிஸ் இருவரும் தவற விட்டார்கள். மொத்தம் ஆறு கேட்சிகளை ஆஸ்திரேலியா தவற விட்டு இருக்கிறது.

அரையிறுதி வாய்ப்பில் பெரிதும் இல்லாமல் இருந்த நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா இரண்டு அணிகளும் ரன் ரேட் நல்ல முறையில் பெற்று இருக்கிறது. நியூசிலாந்து இரண்டு போட்டிகளையும் வென்று இருக்கிறது. தென் ஆப்பிரிக்கா இரண்டாவது போட்டியில் விளையாடுகிறது.

இந்த நிலையில் அரை இறுதிக்கு தகுதி பெற வேண்டும் என்றால் பெரிய அணிகளுடன் இரண்டு மூன்று வெற்றிகளாவது இருக்க வேண்டியது அவசியம். இந்த நிலையில் இந்தியாவுடன் ஆஸ்திரேலியா தோல்வி அடைந்திருக்கிறது. தென் ஆப்பிரிக்க அணி உடனும் தோல்வி அடைந்தால், நியூசிலாந்து, இங்கிலாந்து, பாகிஸ்தான் என மூன்று பெரிய அணிகளையும் வெல்ல வேண்டிய கட்டாயம் ஆஸ்திரேலியாவுக்கு உருவாகும். இதனால் செமி பைனல் வாய்ப்பில் நெருக்கடி உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது!