கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

AUS vs SA.. 10 ஓவர்களில் 104 ரன்.. 34.3 ஓவரில் ஆல் அவுட்.. அனல் பறக்கும் ஆஸ்திரேலியா தென் ஆப்பிரிக்கா ODI சீரியஸ்!

இந்தியாவில் நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தென் ஆப்பிரிக்க மண்ணில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகின்றன!

- Advertisement -

இந்தத் தொடரில் முதலில் நடைபெற்ற இரண்டு ஒருநாள் போட்டிகளை ஆஸ்திரேலியா அணி வென்று தொடரில் பலமான முன்னிலை வகித்தது. இந்த நிலையில் நேற்று தொடரில் மூன்றாவது போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டியின் டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீச முடிவு செய்தது. தென் ஆப்பிரிக்க அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் முதல் விக்கட்டுக்கு 22.5 ஓவரில் 146 ரன்கள் பார்ட்னர்ஷிப் தந்தார்கள். குயின்டன் டி காக் 82, கேப்டன் டெம்பா பவுமா 57 ரன்களில் வெளியேறினார்கள்.

இதற்கு அடுத்து கிடைத்த தொடக்கத்திற்கு ரீசா ஹென்றிக்ஸ் 33, மார்க்கோ யான்சென் 32 மட்டுமே ஓரளவிற்கு எய்டன் மார்க்ரம் உடன் தாக்குபிடித்து ஒத்துழைப்பு தந்தார்கள். ஹென்றி கிளாசன் மற்றும் டேவிட் மில்லர் இரண்டு நட்சத்திர பேட்டர்களும் ஏமாற்றினார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் மிகச் சிறப்பாக விளையாடிய மார்க்ரம் 74 பந்துகளில் 9 பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்கள் உடன் ஆட்டம் இழக்காமல் 102 ரன்கள் குவித்தார். 50 ஓவர்களில் தென் ஆப்பிரிக்கா ஆறு விக்கெட் இழப்புக்கு 338 ரன் குவித்தது. ஆஸ்திரேலிய தரப்பில் ஆச்சரியப்படும் விதமாக டிராவிஸ் ஹெட் 10 ஓவர்களுக்கு 39 ரன்கள் தந்து இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.

இதைத்தொடர்ந்து பெரிய இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியா அணிக்கு டேவிட் வார்னர் அதிரடியில் மிரட்டினார். அவர் 56 பந்துகளில் 10 பவுண்டரி மற்றும் மூன்று சிக்ஸர்கள் உடன் 78 ரன்கள் குவித்தார். டிராவிஸ் ஹெட் 38, கேப்டன் மிட்சல் மார்ஸ் 29 ரன்கள் எடுத்தார்கள்.

இதற்குப் பிறகு யாரும் ஆஸ்திரேலியா அணிக்கு பொறுப்புடன் பேட்டிங் செய்யவில்லை. பத்து ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 104 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலிய அணி, 34.3 ஓவரில் 227 ரன்கள் எடுத்து சுருண்டது. இதன் மூலம் 111 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் நீடிக்கிறது. தென் ஆப்பிரிக்க தரப்பில் ஜெரால்ட் கோட்சி நான்கு விக்கெட் கைப்பற்றினார்.

இந்தியாவில் நடக்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு முன்பாக இரு அணிகளுக்கும் இது மிகச் சிறந்த பயிற்சிதொடராக அமைந்திருக்கிறது. மேலும் ஆஸ்திரேலியா அணி இந்தியா வந்து, இந்தியாவுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், உலகக் கோப்பைக்கு முன்பு விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது!

- Advertisement -
Published by
Tags: Aus vs SaODI

Recent Posts