ஆர்சிபி அணியின் வெற்றி கொண்டாட்டத்தில் நடந்த துயர சம்பவம் மைதானத்திற்கு உள்ளே இருந்த விராட் கோலிக்கு தெரியும் என்று தான் நம்பவில்லை என இந்திய முன்னால் வேகப்பந்துவீச்சாளர் அதுல் வாசன் தெரிவித்திருக்கிறார்.
நேற்று பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி அணியின் ஐபிஎல் வெற்றி கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் நாட்டையே சோகத்திற்கு உள்ளாக்கிய துயர சம்பவம் நடைபெற்றது. இது குறித்து பலரும் பல விதமான கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் அது வாசன் விராட் கோலிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருக்கிறார்.
மக்கள் கூட்டம் அதிகரித்தது ஏன்?
இந்திய கிரிக்கெட்டில் சமகாலத்தில் மிகப்பெரிய வீரர்களாக பார்க்கப்பட்ட தோனி, விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா என மூவரில் தோனி மற்றும் ரோகித் சர்மா இருவரும் கேப்டனாக இருந்து தங்கள் அணிக்கு ஐபிஎல் கோப்பையை பலமுறை வென்று இருக்கிறார்கள். ஆனால் உலகெங்கும் ரசிகர்களைக் கொண்டிருந்த மிகப்பெரிய வீரரான விராட் கோலியால் தன்னுடைய அணிக்கு கேப்டனாக கோப்பையை வெல்ல முடியவில்லை.
பல ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியால் கோப்பையை வெல்ல முடியாததால் வெளியில் அதைச் சுற்றி நிறைய கேலி கிண்டல்கள் உருவாகி இருந்தது. இதன் காரணமாக ஐபிஎல் தொடரில் முதல் முறையாக ஆர்சிபி அணி கோப்பையை வென்றதும், அந்த அணியின் ரசிகர்களுக்கு அது மிகப்பெரிய கொண்டாட்ட நிகழ்வாக மாறிவிட்டது. இதனால் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு பெங்களூர் சின்னசாமி மைதானத்திற்கு அருகில் குவிந்து விட்டார்கள். இதன் காரணமாகத்தான் துயர சம்பவம் நடைபெற்றிருக்கிறது. சம்பவம் நடைபெற்ற போது உள்ளே விழா நடந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
விராட் கோலிக்கு தெரிந்திருக்காது
இதுகுறித்து அதுல் வாசன் பேசும் பொழுது ” விராட் கோலி தனக்கு ரசிகர்களிடமிருந்து கிடைத்ததை திருப்பிக் கொடுத்துக் கொண்டு இருந்தார். இந்த நிலையில் மைதானத்திற்கு உள்ளே வெற்றி கொண்டாட்டத்தில் இருந்த அவருக்கு வெளியில் மக்கள் மடிந்து கொண்டிருக்கிறார்கள் என்ற விஷயம் தெரியாது என நான் நம்புகிறேன். ஏனென்றால் விராட் கோலி அப்படியானவர் கிடையாது. இது தெரிந்திருந்தால் அவர் நிச்சயம் அதை நிறுத்தி விட்டு வெளியே வந்திருப்பார்”
இதையும் படிங்க : ஸ்ரேயாஸ் ஐயர் செஞ்ச தப்ப மன்னிக்க முடியாது.. ஐபிஎல் ஆடவே தடை விதிக்கணும் – யுவராஜ் சிங் தந்தை பேச்சு
“இதே விஷயத்தில் அரசியல்வாதிகளுக்கு தெரிந்திருந்தாலும் அவர்கள் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு இருப்பார்கள். ஏனென்றால் அவர்கள் இரக்கம் இல்லாதவர்கள் தடித்த தோள்களை உடையவர்கள். இதேபோல ஆர்சிபி அணி முதலாளியான கார்ப்பரேட் இப்படி செய்வதற்கு வாய்ப்புகள் உண்டு. ஆனால் இது குறித்து தெரிந்திருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. தெரிந்திருந்தால் அவர்கள் அந்த கொண்டாட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு இருக்க மாட்டார்கள்” என்று ஆதரவாக கூறியிருக்கிறார்.






