ஹர்திக் பாண்டியா பண்ண அதே தப்பை நானும் பண்ணீருப்பேன்; எப்படியோ தப்பிச்சிட்டோம் ஜெயிச்சிட்டோம் – நியூசிலாந்து கேப்டன் பேட்டி!

0
4149

டாஸ் வென்று நானும் பவுலிங் எடுத்துருப்பேன், நல்லவேளை அதிலிருந்து தப்பித்துவிட்டோம் என்கிற பாணியில் பேசியுள்ளார் மிட்ச்சல் சான்ட்னர்.

இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் டி20 போட்டி ராஞ்சி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பவுலிங் செய்தது.

- Advertisement -

நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் அடித்தது. இந்திய ஸ்பின்னர்கள் சிறப்பாக பந்துவீசினர். ஆனால் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இந்த மைதானம் எடுபடவில்லை.

இதை தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி மீது முதல் ஸ்பெல்லில் இருந்தே ஸ்பின்னர்கள் கொண்டு நியூசிலாந்து அணி அட்டாக் செய்தது. இந்த அணுகுமுறை நன்றாக எடுபட்டது. 15 ரன்களுக்கு மூன்று விக்கெடுகளை இழந்து இந்திய அணி பரிதவித்தது.

பின்னர் சூரியகுமார் யாதவ் 47 ரன்களும், பாண்டியா 21 ரன்களும் அடித்து போராடி ஆட்டமிழந்தனர். இறுதிவரை போராடிய வாஷிங்டன் சுந்தர் 28 பந்துகளில் 50 ரன்கள் அடிதது ஆட்டம் இழந்தார். 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்த இந்திய அணி, 21 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

- Advertisement -

போட்டி முடிந்தபின் பேட்டியளித்த நியூசிலாந்து கேப்டன் மிட்ச்சல் சான்ட்னர் பேசுகையில், ” “மைதானத்தில் பந்து இவ்வளவு டர்ன் அதிர்ச்சியாக இருந்தது. குறிப்பாக இரண்டாவது இன்னிங்சில் இப்படி ஸ்பின் ஆனது ஆச்சரியப்படுத்தியது. இதன் காரணமாக பவர்-பிளே ஓவர்களில் இருந்தே சுழல் பந்துவீச்சாளர்களை பயன்படுத்தினேன்.

கடைசியாக டேரல் மிட்ச்சல் நன்றாக விளையாடி கிட்டத்தட்ட 180 ரன்கள் வரை எடுத்து வந்தது நம்பிக்கையை கொடுத்ததால் இன்னும் துணிவுடன் பந்துவீச்சில் களம் இறங்கினோம்.

டாஸ் வென்றிருந்தால் நானும் பந்துவீச்சை தேர்வு செய்திருப்பேன். ஏனெனில் இரண்டாவது இன்னிங்ஸில் இந்த மைதானம் சேஸ் செய்வதற்கு நன்றாக இருக்கும். மைதானத்தில் பனிப்பொழிவும் இருப்பதால் கூடுதல் உதவியாகவும் இருக்கும் என்று நினைத்தேன். இருப்பினும் இந்திய அணி டாஸ் வென்று பவுலிங் செய்தது எங்களுக்கு சாதகமாக முடிந்து இருக்கிறது.” என்றார்.