473/8.. 26 ஆண்டுக்கு பின் இந்திய அணி சாதனை.. குல்தீப்-பும்ரா வரை பேட்டிங்கில் கலக்கல்

0
987
Rohit

மார்ச் 8. இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே தற்பொழுது தரம்சாலா மைதானத்தில் நடைபெற்று வரும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை இந்திய பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தி களைப்படைய வைத்திருக்கிறார்கள்.

இங்கிலாந்து அணி இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 218 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆக, நேற்று முதல் நாள் முடிவில் ஜெய்ஸ்வால் 57 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்க, இந்திய அணி ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 135 ரன்கள் எடுத்திருந்தது.

- Advertisement -

நேற்று ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்ற கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் இன்று தொடர்ந்து இரண்டாவது நாள் விளையாடினார்கள். சிறப்பாக விளையாடிய இருவரும் சேர்ந்து நூறு ரண்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து தொடர்ந்து சென்றார்கள்.

இந்த தொடரின் மூன்றாவது போட்டியில் சதம் அடித்திருந்த கேப்டன் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடி இந்த போட்டியிலும் சதம் அடித்தார். அவரைத் தொடர்ந்து அடுத்த ஓவரிலேயே இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்திருந்த சுப்மன் கில் இந்த போட்டியில் சதம் அடித்தார்.

ஒட்டுமொத்தமாக இந்த ஜோடி 174 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து பிரிந்தது. ரோகித் சர்மா 103 ரன்கள் எடுத்தும், சுப்மன் கில் 110 ரன்கள் எடுத்தும் ஆட்டம் இழந்தார்கள். இவர்கள் இருவரது பொறுப்பான மற்றும் அதிரடியான ஆட்டத்தினால் ஆட்டம் ஒட்டுமொத்தமாக இந்தியாவின் கைகளுக்கு வந்து விட்டது.

- Advertisement -

இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த அறிமுக போட்டியில் விளையாடும் தேவ்தத் படிக்கல் மற்றும் சர்பராஸ் கான் இருவரும் சேர்ந்து மீண்டும் அவர்கள் விட்ட இடத்தில் இருந்து அதிரடியாக விளையாடினார்கள். இந்த ஜோடி அதிரடியாக 97 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. சர்பராஸ் கான் 56 ரன்கள், தேவ்தத் படிக்கல் 65 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.

இதற்கு அடுத்து வந்த துருவ் ஜுரல் 15, ரவீந்திர ஜடேஜா 15, ரவிச்சந்திரன் அஸ்வின் ரன்கள் ஏதும் எடுக்காமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தார்கள். இந்திய அணி 428 ரன்கள் எடுத்து எட்டு விக்கெட்டுகளை இழந்தது.

இதற்குப் பின் ஜோடி சேர்ந்த குல்தீப் யாதவ் 27, ஜஸ்ட்பிரித் பும்ரா 19 இருவரும் சேர்ந்து 108 பந்துகளில் 45 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து விக்கெட் விடாமல் பார்த்துக் கொண்டார்கள். இந்திய அணி தற்பொழுது எட்டு விக்கெட் இழப்புக்கு 473 ரன்கள் சேர்த்து இருக்கிறது. ஒட்டுமொத்தமாக இங்கிலாந்து அணியை விட 255 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது. இங்கிலாந்து அணியின் தரப்பில் சோயப் பஷீர் நான்கு விக்கெட் கைப்பற்றி இருக்கிறார்.

இதையும் படிங்க : 15 வருடம்.. ஜெய்ஸ்வால் கில் ரோகித்.. இந்திய கிரிக்கெட்டில் இரண்டே முறை நடந்த நிகழ்வு

மேலும் இந்த போட்டியில் இந்திய அணியின் முதல் ஐந்து பேட்ஸ்மேன்களும் 50 ரன்கள் தாண்டி எடுத்திருக்கிறார்கள். இதுவரை இந்திய கிரிக்கெட்டில் இத்தோடு சேர்த்து ஐந்து முறை இப்படி நடந்திருக்கிறது. கடைசியாக 1998 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக லக்ஷ்மணன், சித்து டிராவிட் சச்சின் மற்றும் அசாருதீன் ஆகிய ஐந்து பேட்ஸ்மேன்கள் குறைந்தபட்சம் அரை சதம் தாண்டி அடித்து இருந்தார்கள். 26 வருடங்கள் கழித்து மீண்டும் தற்பொழுது இப்படியான நிகழ்வு நடைபெற்று இருக்கிறது.