ஆசியன் கேம்ஸ்.. பாகிஸ்தான் 54 ரன் 5 விக்கெட்.. கடைசியில் ஹாங்காங்கிடம் எஸ்கேப்.. இந்தியாவுடன் மோத வாய்ப்பு இருக்கா?

0
2170
Pakistan

சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் டி20 வடிவத்தில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டிருக்கிறது. முதலில் நடைபெற்ற பெண்களுக்கான கிரிக்கெட் தொடரில் இந்திய பெண்கள் அணி தங்கப் பதக்கம் வென்றது.

இந்த நிலையில் தற்போது ஆண்களுக்கான கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேரடியாக கால்இறுதி சுற்றில் விளையாடிய இந்திய அணி இன்று நேபாள் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்று இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் நேரடியாக அரை இறுதிக்கு தகுதி பெற்ற மற்றொரு அணியான பாகிஸ்தான் அணி இன்று ஹாங்காங் அணியை சந்தித்தது. இந்த போட்டியில் டாசில் வென்ற ஹாங்காங் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

பேட்டிங் செய்ய வந்த பாகிஸ்தான் அணிக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக 54 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகள் போய்விட்டது. நாக் அவுட் சுற்று என்பதால் தோற்றால் வெளியேற வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு ஹாங்காங் அதிர்ச்சி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் இறுதிக்கட்டத்தில் ஆசிப் அலி 25 (21), அராபத் மின்ஹாஸ் 25 (16), மிகக்குறிப்பாக ஆமீர் ஜமால் 2 பவுண்டரிகள் மற்றும் நான்கு மற்றும் 4 சிக்ஸர்கள் என அதிரடியாக 16 பந்துகளில் 41 ரன்கள் எடுக்க, 20 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து பாகிஸ்தான் அணி 160 ரன்கள் சேர்த்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து பெரிய அனுபவம் இல்லாத ஹாங்காங் அணி 18.5 ஓவர்களில் 92 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 68 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஹாங்காங் தரப்பில் பாபர் ஹயாத் மட்டுமே 29 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான அணி அரையிறுதிக்குள் நுழைந்தது

இந்திய அணி அரையிறுதியில் மலேசியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டியில் வெல்லக்கூடிய அணியை எதிர்கொள்கிறது. எனவே அரையிறுதியில் பாகிஸ்தான் அணியை இந்தியா எதிர்கொள்ளாது.

பாகிஸ்தான் அணி தன்னுடைய அரையிறுதியில் வெற்றி பெறும் பட்சத்தில், இந்திய அணியும் அரையிறுதியில் வெற்றி பெறும் பட்சத்தில், இருவரும் இறுதிப் போட்டியில் மோதிக் கொள்வார்கள். அரையிறுதி போட்டிகள் அக்டோபர் ஆறாம் தேதி நடக்கிறது. இறுதிப்போட்டி ஏழாம் தேதி நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது!