ஆசியன் கேம்ஸ்.. தங்கப்பதக்கம்..116 ரன்.. 4 ஓவர் 6 ரன்.. இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இலங்கையை இறுதிப் போட்டியில் வீழ்த்தியது!

0
3690
ICT

தற்பொழுது சீனாவில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய கிரிக்கெட் வாரியம் ஆண்கள் மற்றும் பெண்கள் என இரண்டு அணிகளை அனுப்பி இருக்கிறது.

ஆரம்பத்தில் பெண்கள் கிரிக்கெட் தொடர் நடக்க இருக்கின்ற காரணத்தினால் , இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி ஹர்மன்பிரீத் கவுர் தலைமையில் முன்பே போய் விளையாடிக் கொண்டிருக்கிறது. ருதுராஜ் தலைமையிலான ஆண்கள் கிரிக்கெட் அணி பிறகு செல்ல இருக்கிறது.

- Advertisement -

இந்திய அணி பங்களாதேஷ் அணியை அரையிறுதியில் தோற்கடித்து தங்கத்திற்கான இறுதிப் போட்டி வாய்ப்பை பெற்றது. இதே போல் பாகிஸ்தான் அணியை இலங்கை அணி வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இந்த நிலையில் இன்று இந்த இரு அணிகளும் தங்கப்பதக்கத்திற்கான இறுதிப் போட்டியில் விளையாடின. இந்திய அணி முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்வது என தீர்மானித்தது.

இந்திய அணிக்கு பேட்டிங்கில் ஸ்மிருதி மந்தனா 46 (45), ஜெமிமா ரோட்ரிகியூஸ் 42 (40) மட்டுமே பெரிய ரன் பங்களிப்பை கொடுத்தார்கள். மீதி யாரும் சரியான ரன் பங்களிப்பை தரவில்லை. இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உள்ள இலக்கை நோக்கி களம் இறங்கிய இலங்கை அணிக்கு, இந்திய அணியின் பந்துவீச்சாளர் சாது மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்தார். அவர் நான்கு ஓவர்கள் பந்து வீசி, ஒரு மெய்டன் செய்து, ஆறு ரன்கள் மட்டுமே விட்டுத் தந்து மூன்று விக்கெட் கைப்பற்றினார்.

இந்த இடத்திலேயே இலங்கை அணி சிக்கிக் கொண்டது. இதற்கு அடுத்து கீழ் வரிசையில் ஹாசினி பெரேரா 25, நிலாக்ஷி டி சில்வா 23 மட்டுமே 20 ரன்கள் தாண்டி எடுத்தார்கள். 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதை அடுத்து இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த இலங்கை அணி வெள்ளிப் பதக்கத்தை பெறுகிறது. வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் பங்களாதேஷ அணி பாகிஸ்தானை வீழ்த்தி வெண்கல பதக்கம் பெற்றிருக்கிறது!