ஏசியன் கேம்ஸ்.. 7 பேர் சிங்கிள் டிஜிட்.. 9 ஓவரில் அதிரடி சேஸ்.. சாய் கிஷோர் திலக் அசத்தல்.. பைனலில் இந்தியா.. பங்களாதேஷ் பரிதாபம்.. வெள்ளிப் பதக்கம் உறுதி!

0
1591
ICT

சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் கிரிக்கெட் டி20 வடிவத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது. இந்த முறை இந்திய கிரிக்கெட் வாரியம் ஆண்கள், பெண்கள் என இரண்டு அணிகளையும் அனுப்பி வைத்தது. பெண்கள் அணி தங்கப் பதக்கம் வென்று வந்தது.

இந்த நிலையில் இன்று ருத்ராஜ் தலைமையிலான இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி பங்களாதேஷ் அணிக்கு எதிராக அரை இறுதிப் போட்டியில் விளையாடியது.

- Advertisement -

இந்தப் போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொண்டு விளையாட முடியாமல் பங்களாதேஷ் பேட்ஸ்மேன்கள் பரிதாபமாக சுருண்டார்கள்.

பங்களாதேஷ் அணியின் பர்வேஸ் ஹூசைன் 23, ஜேக்கர் அலி 24 இருவர் மட்டுமே 20 ரன்கள் தாண்டி எடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் பங்களாதேஷ் அணி ஒன்பது விக்கெட் இழப்புக்கு 96 ரன்கள் மட்டும் எடுத்தது. பங்களாதேஷ் அணியில் ஏழு பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டம் இழந்தார்கள்.

இந்திய அணியின் தரப்பில் சாய் கிஷோர் 4 ஓவர்களுக்கு 12 ரன்கள் தந்து 3 விக்கெட் கைப்பற்றினார். வாஷிங்டன் சுந்தர் 4 ஓவர்களுக்கு 15 ரன்கள் தந்து இரண்டு விக்கெட் கைப்பற்றினார். மேலும் அர்ஸ்தீப் சிங், திலக் வர்மா, ரவி பிஸ்னோய், ஷாபாஷ் அகமத் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

இதைத் தொடர்ந்து இருபது ஓவர்களுக்கு 97 ரன்கள் என்கின்ற எளிய இலக்குக்கு களமிறங்கிய இந்திய அணிக்கு, கடந்த முறை சதம் அடித்த துவக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் இந்த முறை ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார்.

ஆனால் இதற்குப் பிறகு வந்த திலக் வர்மா அதிரடியாக விளையாடி 26 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் உடன் 56 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் நின்றார். இவருக்கு துணையாக கேப்டன் ருதுராஜ் 26 பந்துகளில் 4பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் உடன் 40 ரன்கள் எடுத்து ஆட்டமென இழக்காமல் களத்தில் நின்றார்.

இந்திய அணி 9.2 ஓவர்களில் 97 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இறுதிப் போட்டியில் இந்திய அணி ஆப்கானிஸ்தான் இல்லை பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ளும். தற்போதைக்கு ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணிக்கு வெள்ளி பதக்கம் உறுதியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது!