ஆசிய கோப்பை.. இந்தியா பாகிஸ்தான் போட்டி மழையால் பாதிக்கப்படுமா? கவலையான வானிலை!

0
375
Asia cup

பதினாறாவது ஆசியக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர், பாகிஸ்தான் நேபாள் அணிகளுக்கு இடையேயான போட்டி மூலமாக, இன்று பாகிஸ்தான் முல்தான் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது!

இந்தத் தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்டால் மட்டுமே அதிக வருவாய் ஈட்ட முடியும் என்கின்ற காரணத்தினால், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் இரண்டு அணிகளையும் ஒரே குழுவில் வைத்ததோடு, குழுவில் மூன்றாவது அணியாக சிறிய அணியான நேபாள் அணியையும் வைத்திருக்கிறது.

- Advertisement -

இதன் காரணமாக இந்தியா பாகிஸ்தான் அணிகள் முதல் சுற்றில் மோதிக் கொள்ளும். எப்படியும் தங்கள் குழுவில் இருந்து இரண்டாவது சுற்றுக்கு நேபாள் அணியை வீழ்த்தி முன்னேறி விடும். இதன் மூலம் இரண்டாவது சுற்றிலும் ஒரு முறை மோதிக் கொள்ளும். இரண்டு அணிகளும் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் இறுதிப் போட்டியிலும் மோதிக் கொள்ளும்.

இப்படி ஒரே தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மூன்று முறை மோதிக் கொள்வதாக இருந்தால், அந்தப் போட்டியைச் சுற்றி எக்கச்சக்க பணம் புரளும். தொடரை நடத்தும் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். இதன் காரணமாகவே அட்டவணைகள் இவ்வாறு அமைக்கப்படுகின்றன.

இந்த வகையில் இந்திய அணி தனது முதல் சுற்றின் முதல் போட்டியில் செப்டம்பர் இரண்டாம் தேதி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. அடுத்து ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வர இருப்பதால், இரண்டு அணிகளும் என்ன மாதிரியான பலத்தில் இருக்கின்றன? என்பதை பரிசோதிக்க இது மிக முக்கிய போட்டியாக இருக்கிறது.

- Advertisement -

எனவே வழக்கமாக இந்தியா பாகிஸ்தான் மோதிக் கொள்ளும் போட்டிக்கு இருக்கும் எதிர்பார்ப்பு, இந்தப் போட்டிக்கு சற்று கூடுதலாகவே இருக்கிறது. இருநாட்டு ரசிகர்கள் இல்லாமல் பிற நாட்டு கிரிக்கெட் ரசிகர்களும் இந்த போட்டியை எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

நிலவரங்கள் இவ்வாறாக இருக்க, இந்தியா பாகிஸ்தான் அணிகள் முதல் போட்டியில் மோதிக் கொள்ளும் கண்டி பல்லேகலே மைதானத்தைச் சுற்றிய வானிலை கவலைக்குரியதாக இருக்கிறது. போட்டி நடக்கும் அன்றைய நாளில் 90 சதவீதம் இடியுடன் கூடிய மலையும், 82 சதவீதம் காற்றில் ஈரப்பதமும், 28 டிகிரி செல்சியஸ் வெப்பமும் இருக்கும் என்று கூகுள் வானிலை குறிப்பிடுவதாக செய்திகள் வருகிறது. இப்படி நடந்தால் நிச்சயம் போட்டி நடைபெற வாய்ப்பு கிடையாது. எனவே இந்தச் செய்தி இரு அணிகளையும், இருநாட்டு ரசிகர்களையும் மிகவும் கவலையில் ஆழ்த்தி இருக்கிறது.

ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் லியர், கே.எல். ராகுல், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா.