அஸ்வினை கைப்பற்றிய ராஜஸ்தான் ராயல்ஸ் ; பட்லர் & அஸ்வின் ஒரே அணியில் ஆடுவதைக் குறித்து நட்சத்திர கிரிக்கெட் வீரர்களின் கருத்து

0
480
Ravichandran Ashwin and Jos Buttler

தமிழக அணி வீரரான ரவிச்சந்திரன் அஷ்வின் 5 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கைப்பற்றியுள்ளது. ஐபிஎல் தொடரில் இதுவரை சென்னை, புனே, பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்காக விளையாடி இருக்கிறார்.

167 போட்டிகளில் 145 விக்கெட்டுகளை இதுவரை அவர் கைப்பற்றியிருக்கிறார் ஐபிஎல் தொடரில் இவருடைய பௌலிங் ஆவெரேஜ் 27.8 மற்றும் பௌலிங் எகானமி 6.91 என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஐபிஎல் தொடரை பொறுத்தவரையில் நல்ல அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்கள் மத்தியில் நம்பர் ஒன் வீரர் என்றால் அது ரவிச்சந்திரன் அஷ்வின் மட்டுமே. ராஜஸ்தான் அணியில் அவர் விளையாட போகும் செய்தி அந்த அணி ரசிகர்களை சந்தோஷம் அடையச் செய்துள்ளது. மறுபக்கம் சென்னை அணி அவரை கைப்பற்றிவிடும் என்ற நம்பிக்கையில் சிஎஸ்கே ரசிகர்கள் இருந்த நிலையில் ராஜஸ்தான் அணி அவரை கைப்பற்றியது சென்னை ரசிகர்களை சோகமடைய செய்துள்ளது.

ராஜஸ்தான் அணியில் ஜோஸ் பட்லர் உடன் இணைந்து விளையாட போகும் ரவிச்சந்திரன் அஸ்வின்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபொழுது ரவிச்சந்திரன் அஸ்வின் ஜோஸ் பட்லரை மன்கத் முறைப்படி ரன் அவுட் செய்தார்.

மன்கத் முறை என்பது ஒரு பந்து வீச்சாளர் பந்து வீசுவதற்கு முன்பாகவே பந்துவீச்சாளர் உடைய கிரீஸ்சில் இருந்து பேட்ஸ்மேன் சற்று நகர்ந்து சென்றால் அவரை, பந்துவீச்சாளர் சாமர்த்தியமாக ரன்அவுட் செய்யலாம்.

- Advertisement -

அந்த முறைப்படி ரவிச்சந்திரன் அஸ்வின் ஜோஸ் பட்லரை ரன் அவுட் செய்த செயல் மிகப்பெரிய அளவில் சர்ச்சையானது. இதில் ரவிச்சந்திரன் அஸ்வின் செய்தது தவறில்லை என்று அவருக்கு ஆதரவாகவும் அவர் செய்தது தவறு என்று ஜோசப் பட்லருக்கு ஆதரவாகவும் ரசிகர்கள் மாறி மாறி தங்களுடைய கருத்துகளை தெரிவித்து கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தான் அணியின் வீரர்கள் நிலவரம்

மெகா ஏலம் நடைபெறுவதற்கு முன்பாகவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் ஜோஸ் பட்லர் சஞ்சு சாம்சன் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோரை கைப்பற்றியிருந்தது.

- Advertisement -

ஏலத்தின் முதல் சுற்று முடிவில் ரவிச்சந்திரன் அஸ்வினை 5 கோடி ரூபாய்க்கும் டிரென்ட் போல்ட்டை 8 கோடி ரூபாய்க்கும் ராஜஸ்தான் அணி கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.