இவர் மட்டும் டி20ல் ஆடட்டும்; இந்த 3 பெரும் டி20ல் இருந்து சீக்கிரம் ஓய்வு பெறவேண்டும் – முன்னாள் வீரர் பேட்டி!

0
2148

டி20 போட்டிகளில் இருந்து இந்திய அணியின் சில மூத்த வீரர்கள் ஓய்வு பெற வேண்டும் என்று கருத்து தெரிவித்திருக்கிறார் முன்னாள் இங்கிலாந்து வீரர் மான்டி பனேசர்.

டி20 உலக கோப்பை தொடரில் அரையிறுதி வரை சென்ற இந்திய அணி, படுமோசமாக இங்கிலாந்து அணியிடம் தோல்வியை தழுவியது. இந்திய அணி கோப்பையை வெல்லாமல் வெளியேற முழு முக்கிய காரணம் ரோகித் சர்மா, கேஎல் ராகுல் போன்ற வீரர்கள் என கூறப்படுகிறது.

- Advertisement -

6 போட்டிகளில் ரோகித் சர்மா வெறும் 116 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார். நெதர்லாந்து அணிக்கு எதிரான அரைசதம் தவிர மற்ற போட்டிகளில் கிட்டத்தட்ட 20க்கும் குறைவாகவே அடித்தார் கேஎல்

ராகுல் இரண்டு அரை சதங்களை தவிர மற்ற போட்டிகளில் ஒற்றை இலக்கத்திலேயே அடித்தார். மேலும் ரவிச்சந்திரன் அஸ்வினின் பந்துவீச்சும் சரியாக ஈடுபடவில்லை. இந்திய அணியிலேயே அவர்தான் அதிக சிக்ஸர்களை விட்டுக் கொடுத்தார்.

தினேஷ் கார்த்திக் பினிஷிங் ரோலில் களம் இறங்கி அவரும் சரியாக செயல்படவில்லை. முக்கியமான கட்டத்தில் ஆட்டம் இழந்து வெளியேறினார்.

- Advertisement -

இப்படி அணியின் மூத்த வீரர்கள் தொடர்ச்சியாக சொதப்பியதால் இந்திய அணிக்கு உலகக் கோப்பை கனவும் சிதைந்து இருக்கிறது. அணியின் ஒற்றை நம்பிக்கையாக இருந்த மூத்த வீரர் விராட் கோலி தொடர் முழுவதும் நன்றாக செயல்பட்டார்.

இந்நிலையில் விராட் கோலியை பெருமிதமாகவும் மற்ற வீரர்கள் அனைவரும் விரைவில் ஓய்வு முடிவு அறிவிக்க வேண்டும் என்றும் தனது கருத்தில் தெரிவித்து இருக்கிறார் இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் மான்டி பனேசர்.

“இந்திய அணி ஏமாற்றம் அளித்துவிட்டது. அணியிலிருந்து சிலர் ஓய்வு முடிவுகளை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.”

“அரையறுதி போட்டியில் இந்திய அணி எதிர்த்துப் போராடவே இல்லை. இந்திய பந்துவீச்சாளர்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. 168 ரன்கள் என்பது குறைவான ஸ்கோர் அல்ல, எளிதாக கட்டுப்படுத்தக்கூடிய ஒன்று. ஆட்டம் ஒரு தலைப்பட்சமாக சென்றுவிட்டது.”

“அஸ்வின், தினேஷ் கார்த்திக், ரோகித் சர்மா ஆகியோர் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு முடிவுகளை அறிவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. பிசிசிஐ இவர்களை அழைத்து எதிர்கால திட்டம் என்ன என்பதை நிச்சயம் ஆலோசிக்க வேண்டும். அதன் பிறகு அவர்களிடம் இந்திய அணியின் வருங்கால திட்டத்தை பற்றியும் எடுத்துரைத்து அதற்கேற்றார் போல் முடிவுகளை எடுக்க வலியுறுத்த வேண்டும்.

விராட் கோலி மிகவும் கட்டுக்கோப்பான வீரராக இருக்கிறார். உடல் அளவிலும் தகுதியுடன் இருக்கிறார். தற்போது இருக்கும் மூத்த வீரர்களில் 2024 ஆம் ஆண்டு உலகக் கோப்பை வரை விளையாடுவதற்கு அவர் மட்டுமே சரியாக இருப்பார். சூரியகுமார் யாதவ் இதே ஃபார்மில் தொடர்ந்தால் அவரும் அணியில் நீடிக்கலாம். மற்ற மூத்த வீரர்களை வெளியேற்றிவிட்டு இளம் அணியாக உருவாக்குவதற்கு இதுதான் சரியான நேரம்.” என்றார்.