தோனியை வீழ்த்திய சந்தீப் சர்மா.. அதுக்கு காரணமே அஸ்வின் தான்! நடந்தது என்ன?

0
1513

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கடந்த மாதம் சேப்பாக்கம் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த ஆட்டத்தில் கடைசி ஓவரில் சிஎஸ்கே வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது.

அப்போது, அந்த ஓவரை சந்தீப் ஷர்மா வீசினார். சிஎஸ்கே கேப்டன் தோனி முதல் 2 பந்துகளை சிக்ஸருக்கு விளாசினார். இதை அடுத்து சிஎஸ்கே வெற்றி உறுதி என்று நினைத்த நிலையில் சந்தீப் சர்மா அபாரமாக செயல்பட்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு திரில் வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

- Advertisement -

எப்போதும் ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்கக் கூடியவர் தோனி. ஆனால் அன்றைய ஆட்டத்தில் 17 பந்துகளில் 32 ரன்கள் அடித்தும் சிஎஸ்கே தோற்றது. இந்த நிலையில் இந்த போட்டியின் போது என்ன நடந்தது என்பது குறித்து அஸ்வின் கூறியிருக்கிறார். இது குறித்து பேசிய அவர் தோனி போன்ற ஒரு பேட்ஸ்மேன் கடைசி ஓவரில் 20 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலை இருந்தது.

முதல் இரண்டு பந்துகள் சிக்சருக்கு பறந்தது. இந்த சூழலில்  பந்துவீச்சாளர் அதன் பிறகு வெற்றியை பெற்று தருவது எல்லாம் வாய்ப்பே இல்லாத விஷயம். ஆனால் அந்த சமயத்தில் முதல் இரண்டு பந்துகள் சிக்ஸருக்கு சென்ற நிலையில், சந்தீப் சர்மாவுக்கு  நான் கொடுத்த ஐடியா நல்ல பயனை கொடுத்தது.

நெருக்கடியான சமயத்தில் அவரிடம் சென்று இந்த மாதிரி தருணத்தில் இருப்பதிலேயே மிகவும் ரிஸ்க்கான பந்து எது என்று கேட்டேன். அதற்கு அவர் ஸ்லோ லென்த் பால் என்று கூறினார். அப்படி என்றால் அந்த பந்தை தற்போது வீசு. ஏனென்றால் பந்துவீச்சாளர் கடும் நெருக்கடியில் இருப்பார் என்று பேட்ஸ்மேனுக்கு தெரியும். நெருக்கடியான சமயத்தில் எளிதில் ரன்கள் போகக்கூடிய ரிஸ்க் பந்தை பவுலர் வீசமாட்டார் என பேட்ஸ்மேன் நினைத்துக் கொண்டு இருப்பார்கள்.

- Advertisement -

அந்த தருணத்தில் நீ இந்த ரிஸ்கான பந்தை வீசு இதனை அவர்கள் கொஞ்சமும் எதிர்பார்க்க மாட்டார்கள். வந்தால் மழை போனால் பார்த்துக் கொள்ளலாம் என நான் கூறினேன். இதனைத் தான் சந்தீப் ஷர்மா செய்தார். அதற்கு நல்ல பலன் கிடைத்தது என்று அஸ்வின் கூறினார். இதன் காரணமாக சிஎஸ்கே அணிக்கு கிடைக்க வேண்டிய இரண்டு புள்ளிகள் பறிபோனது. நடப்பு சீசன் மட்டுமல்லாமல் கடந்த இரண்டு சீசன்களிலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் கூடிய அனைத்து லீக் போட்டியிலும் சிஎஸ்கே அணி தோல்வியை தழுவி இருக்கிறது.