மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் வீரரான அம்பாதி ராயுடு, வரவிருக்கும் ஐபிஎல் ஏலத்தில் பஞ்சாப் விடுவித்த 26 வயதான அன்கேப்டு வீரர் நேஹல் வதேராவைத் குறிவைப்பது குறித்துப் பேசியுள்ளார். மும்பை அணி அணியின் தேவைகளைத் துல்லியமாக அறிந்து செயல்படும் விதம் குறித்தும் அவர் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து அம்பாதி ராயுடு பேசும்போது “நேஹல் வதேராவை ஏலத்தில் பார்க்கும்போது அவர்கள் மிகவும் சந்தோஷப்படுவார்கள். மிக ஆர்வமாக இருப்பார்கள். அவர் முன்பு அவர்களுக்காக விளையாடிய ஒரு வீரர், அவரை அவர்கள் பெற முடிந்தால் அது ஒரு கிரேட் அடிஷனாக இருக்கும். இப்போதெல்லாம் உங்களிடம் எத்தனை பிளேயர்கள் இருக்கிறார்கள், யாராவது ஒருவர் சிறப்பாக விளையாடுவார்கள் என்று நம்புவது முக்கியமல்ல; உங்களுக்கு உண்மையில் என்ன தேவை என்பதை டார்கெட் செய்வதுதான் முக்கியம். அந்த வகையில் எம்ஐ பல அணிகளை விட முன்னிலையில் இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தொடர்ந்து பேசிய அம்பாதி ராயுடு “அவர்களின் ஸ்டார் பிளேயர்கள் தங்களின் பங்களிப்பை வழங்க வேண்டும், வரவிருக்கும் சீசனில் தங்களது கைகளை உயர்த்தி பொறுப்பை ஏற்க வேண்டும், இல்லையென்றால் இந்த ஐபிஎல் தொடர் எம்ஐ அணிக்கு அவ்வளவு எளிதாக இருக்காது. அவர்கள் செய்தது நல்ல ரிலீஸ்கள் என்று நான் நினைக்கிறேன்; இது மிகவும் ஸ்மார்ட்டான முடிவு, ஏனெனில் அவர்களுக்கு ஒரு நல்ல மிடில் ஆர்டர் பேட்டர் தேவை, அந்த இடத்தில்தான் எம்ஐ கொஞ்சம் தடுமாறுகிறது” என்று கூறி இருக்கிறார்.
அவர் மேலும் பேசுகையில் “தற்போதைய ஐபிஎல் தொடர்களில் சரியான திட்டமிடலுடன் ஏலத்தை அணுகுவது அவசியமான ஒன்றாகும். மும்பை அணி தனது பலவீனங்களைச் சரிசெய்துவிட்டு இந்த முறை களமிறங்கும் என்று எதிர்பார்க்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.