நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி நிர்வாகம் களத்தில் எந்த திட்டமும் இல்லாமல் வருவது தனக்கு புரியவில்லை என ரவிச்சந்திரன் அஸ்வின் விமர்சனம் செய்திருக்கிறார்.
நேற்று ஹைதராபாத் அணிக்கு எதிராக சிஎஸ்கே 195 ரன் இலக்கை நோக்கி விளையாடியது. முதல் 10 ஓவர்களில் 110 ரன்கள் எடுத்தது. அதற்கு அடுத்து எளிமையாக வெல்ல வேண்டிய போட்டியை கோட்டை விட்டது. பேட்டிங் ஆர்டரில் நிறைய சொதப்பல்களை செய்தது.
சிஎஸ்கே நிர்வாக சொதப்பல்
இந்த போட்டியில் முதல் இரண்டு விக்கெட்டுகள் விழுந்ததும் இந்த போட்டிக்காக மட்டுமே கொண்டுவரப்பட்ட மேத்யூ ஷார்ட்டை களம் இறக்கினார்கள். ஆனால் அந்த நேரத்தில் பிரிவிஸ் இல்லை சர்பராஸ் கான் களம் இறக்கப்பட்டிருக்க வேண்டும். மேத்யூ ஷார்ட் சிவம் துபே தாண்டி கடைசிக்கு தள்ளப்பட்டு இருக்க வேண்டும்.
இதை செய்யாத காரணத்தினால் 30க்கும் மேற்பட்ட பந்துகளை சந்தித்து விளையாடி ரன்கள் எடுக்காதது சிஎஸ்கே அணியின் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது. சிஎஸ்கே அணி நிர்வாகத்தில் திட்டம் எடுக்கும் முறை மிகவும் மோசமாக இருந்து வருகிறது.
எனக்கு புரியவே இல்லை
இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்போது ” எதையுமே புரிந்து கொள்ளாமல் சிஎஸ்கே அணி நிர்வாகம் எப்படி போட்டிக்குள் வருகிறது என்பதுதான் எனக்கு புரியவே இல்லை. நீங்கள் போட்டியின் போது என்ன பார்க்கிறீர்கள்? மற்றும் மைதானங்களில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை பார்க்கிறீர்களா? இதே மைதானத்தில் கடைசி போட்டியில் ராஜஸ்தான் எப்படி விழுந்தது என்று பார்த்தீர்களா?”
இதையும் படிங்க: ஜடேஜாவால மேட்ச் ஜெயிச்சு கொடுக்க முடியாது.. ராஜஸ்தான் தலைவிதியே இவங்க கிட்டதான் இருக்கு – சேவாக் கருத்து
“நீங்கள் பிரிவிஸை ஃபினிஷராக அனுப்புகிறீர்களா? இவருக்கு முன்பாக நீங்கள் மேத்யூ ஷார்ட்டை அனுப்புகிறீர்கள். ஆயுஷ் நல்ல வேகத்தை கொடுத்தார். அதை தொடர்ந்து எடுத்துச் செல்வதற்கு பிரிவிஸை அனுப்பாததை நினைத்து நான் அதிர்ச்சியடைந்தேன். இதற்கு எனக்கு எந்த பதிலும் இல்லை” என்று கூறியிருக்கிறார்






