” தோனி எனக்கு கொடுத்த சலுகையை நான் மறுத்ததற்கு வருந்துகிறேன் ” – ஆஷிஷ் நெஹ்ரா பேச்சு

0
4116
Ashish Nehra and MS Dhoni

இந்த ஐ.பி.எல் சீசன்ல வீரர்களைத் தாண்டி, முன்னாள் வீரரும் இந்நாள் பயிற்சியாளருமான ஒருவர் பலரது வியப்புக்கும் உள்ளாகி இருக்கிறார். நடந்து முடிந்த ஐ.பி.எல் மெகா ஏலத்தின் போது, மிகமிக சுமாராகச் செயல்பட்டதாகக் கூறி விமர்சிக்கப்பட்டவர்தான், இன்று மெதுவாக புகழ் வட்டத்திற்குள் வருகிறார். அவர் வேறு யாருமல்ல இந்திய பிரபல முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், இந்நாள் ஐ.பி.எல் குஜராத் அணியின் பயிற்சியாளருமான ஆஷிஷ் நெக்ராதான் அவர்!

இந்தியாவின் இடக்கை மெக்ராத் என்று புகழப்படுகிற, இந்திய அணிக்காக 1999ல் அறிமுகமான நெக்ராவின் கிரிக்கெட் பயணம் மிக நீண்டது. 2017ல் தனது ஓய்வை அறிவிந்தார் நெக்ரா. இதற்கிடையில் எட்டு ஆண்டுகள் 2005 டூ 2009, 2012 டூ 2015 காயத்தால் அவர் இந்திய அணிக்காக விளையாட முடியாமல் ஒதுங்கி இருந்து.

- Advertisement -

2009ல் அவர் திரும்பி வரும்போது மகேந்திர சிங் தோனி அவரை டெஸ்ட் கிரிக்கெட் ஆட வருமாறு அழைப்பு விடுத்திருக்கிறார். ஆனால் நெக்ரா தோனியின் அழைப்பை மறுத்திருக்கிறார். இதுக்குறித்து நினைவுகூர்ந்துள்ள நெக்ரா கூறியிருப்பதாவது “நான் 2009ல் திரும்பி வந்தபொழுது, இந்திய அணியில் நிறைய மாற்றங்கள் இருந்தது. தோனி அணியை வழிநடத்திக்கொண்டிருந்தார். அப்பொழுது எங்களுக்குள் பெரியளவில் பேச்சுவார்த்தைகள் இருந்ததில்லை. அந்த சமயத்தில் தோனி எனக்கு டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் வாய்ப்பை வழங்கினார். ஆனால் காயங்களை யோசித்து நான் அதை நிராகரித்தேன். இன்று திரும்பி பார்க்கும் பொழுது, அந்த முடிவுக்காக வருந்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

1999ல் அறிமுகமான நெக்ரா 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். இவரது கடைசி டெஸ்ட் போட்டியாக 2004ல் பாகிற்தானிற்கு எதிராக இந்தியா விளையாடிய டெஸ்ட் போட்டி அமைந்தது. இவர் தொடர்ந்து டெல்லி அணிக்காக 2014 வரை சிவப்புப்பந்து போட்டிகளில் பங்கேற்று வந்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது!