இந்திய கிரிக்கெட்

ஐபிஎல் ஏலத்தில்.. இந்த வீரரை வாங்க 520 கோடி இருந்தால் கூட போதாது – ஆசிஷ் நெக்ரா பேட்டி

இந்திய அணியில் ஒரு குறிப்பிட்ட வீரர் ஐபிஎல் ஏலத்திற்கு வந்தால் அவரை வாங்குவதற்கு அணிகளிடம் 520 கோடி ரூபாய் பணம் இருந்தால் கூட போதாது என இந்திய முன்னாள் வீரர் ஆசிஷ் நெக்ரா கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்த முறை ஐபிஎல் மெகா ஏலத்திற்கு வீரர்களை தக்க வைப்பதில் இந்திய கிரிக்கெட் வாரியம் கொஞ்சம் தாராளம் காட்டியிருந்தது. இதன் காரணமாக நிறைய முக்கிய வீரர்கள் ஐபிஎல் ஏலத்திற்குள் வரவில்லை. அணிகள் அந்த வீரர்களை தக்க வைத்துக் கொண்டன. கடந்த வருடம் ஐபிஎல் மினி ஏலத்தை விட இந்த வருட ஐபிஎல் மெகா ஏலம் சுவாரசியம் குறைவாகத்தான் இருந்தது.

கிரிக்கெட் உலகின் மிகச்சிறந்த வீரர்

இந்த நிலையில் தற்போதைய கிரிக்கெட் உலகின் மிகச்சிறந்த வீரராக இந்திய அணிக்கும் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும் விளையாடும் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பும்ரா பார்க்கப்படுகிறார். இன்றைய தேதிக்கு மிக மதிப்பு மிக்க வீரராக அவரே முதலிடத்தில் இருக்கிறார்.

ஐபிஎல் மெகா ஏலத்தில் பும்ராவை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் வெளியில் விடவில்லை. அவரை 18 கோடி ரூபாய்க்கு தக்கவைத்துக் கொண்டார்கள். அதே சமயத்தில் ஐபிஎல் மெகா ஏலத்தில் அதிகபட்சமாக டிரெண்ட் போல்டை 12.50 கோடி கொடுத்து வாங்கினார்கள். இதற்கு அடுத்து தீபக் சஹரை 9.25 கோடி ரூபாய்க்கு வாங்கினார்கள்.

- Advertisement -

520 கோடிகள் இருந்தாலும் போதாது

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அபாரமாக செயல்படும் பும்ரா பற்றி ஆசிஷ் நெக்ரா கூறும்பொழுது “ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் பும்ரா செய்ததை ஏற்கனவே பலமுறை செய்திருக்கிறார். ரோஹித் சர்மா விளையாடாத காரணத்தினால் முதல் டெஸ்ட் போட்டிக்கு அவர் கேப்டன் ஆகவும் செயல்பட்டார். இதன் காரணமாக அவருக்கு கூடுதல் அழுத்தம் இருந்திருக்க வேண்டும். இருந்தாலும் பும்ரா மிகச் சிறப்பாக அழுத்தத்தை சமாளித்ததை பாராட்ட வேண்டும்”

இதையும் படிங்க: ஷமி செலக்சன்.. இது நடந்தால் மட்டுமே சாத்தியம்.. பிசிசிஐ கண்டிப்பான உறுதி – வெளியான தகவல்கள்

“சொந்த மண்ணில் நியூசிலாந்து அணியால் ஒயிட் வாஸ் செய்யப்பட்ட பிறகு இந்திய அணியை ஆஸ்திரேலியாவில் பும்ரா வழிநடத்திய விதம் உறுதியான சாட்சியாக இருந்தது. உங்களால் அவரை வெல்ல முடியாது. பும்ரா ஐபிஎல் ஏலத்தில் இருந்திருந்தால் எதுவும் நடந்திருக்கும். ஐபிஎல் 520 கோடி பர்ஸ் கூட போதுமானதாக இருந்திருக்காது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts