ஒரே இன்னிங்சில் 8 விக்கெட்டுகள்… இங்கிலாந்து அணியை தவிடுபொடியாக்கிய ஆஸ்திரேலிய வீரங்கனை! – அபார வெற்றி!

0
747

268 ரன்கள் இலக்கை எட்டமுடியாமல் 178 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இங்கிலாந்து பெண்கள் அணி. ஆஸ்திரேலிய பெண்கள் அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இங்கிலாந்து பெண்கள் அணி மற்றும் ஆஸ்திரேலியா பெண்கள் அணிகளுக்கு இடையேயான ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நாட்டிங்கம் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் ஆஸ்திரேலிய பெண்கள் அணி முதலில் பேட்டிங் செய்தது.

- Advertisement -

நட்சத்திர வீராங்கனை எல்லிஸ் பெரி 99 ரன்கள், தாலியா மெக்ராத் 61 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தனர் பின்னர் வந்து அபாரமாக விளையாடி அணியை பெரிய ஸ்கோருக்கு எடுத்துச் சென்ற சதர்லான்ட் 137 ரன்கள் அடித்தார் இறுதியில் ஆஸ்திரேலியா பெண்கள் அணி 473 ரன்கள் அடித்து முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட் ஆனது.

இதனை அடுத்து முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்து இங்கிலாந்து பெண்கள் அணிக்கு ஹீதர் நைட் 57 ரன்கள் மற்றும் நாட் ஸ்கைவர்-பிரண்ட் 78 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தனர் இறுதிவரை போராடிய துவக்க வீராங்கனை பவுமண்ட் 208 ரன்கள் அடித்து அவுட்டாகினர். இங்கிலாந்து பெண்கள் அணி 463 ரன்கள் அடித்து ஆல் அவுட் ஆனது.

10 ரன்கள் முன்னிலை பெற்றதில் இருந்து இரண்டாவது இன்னிங்சை துவங்கிய ஆஸ்திரேலியா பெண்கள் அணிக்கு துவக்க வீராங்கனகள் மூனே மற்றும் லிட்ச்ஃபீல்டு இருவரும் சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 99 ரன்கள் சேர்த்தனர்.

- Advertisement -

இதில் மூனே அரைசதம் அடித்தார். லிச்ஃபீல்டு 46 ரன்களுக்கு அவுட் ஆனார். மூனே 85 ரன்களுக்கு பின்னர் ஆட்டம் இழந்தார். மற்ற வீரர்கள் வரிசையாக விக்கெட்டுகளை இழந்துவர கேப்டன் அலேசா ஹீலே அரைசதம் அடித்து அவுட் ஆனார். இரண்டாவது இன்னிங்ஸில் 257 ரன்கள் அடித்த ஆஸ்திரேலியா பெண்கள் அணி மொத்தம் 267 ரன்கள் அடித்தது.

268 ரன்கள் இலக்கை துரத்திய இங்கிலாந்து பெண்கள் அணி ஆரம்பத்தில் வரிசையாக விக்கெட்டுகளை இழந்து 73/4 எனும் பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டது. நட்சத்திர வீராங்கனை டானி வைட் மற்றும் டங்க்லெ இருவரும் சேர்ந்து ஐந்தாவது விக்கெட்டுக்கு 37 ரன்கள் சேர்த்தனர். டங்க்லெ 16 ரன்களுக்கும், அடுத்து வந்த கேட் க்ராஸ் 13 ரன்களுக்கும் அவுட்டாகினர்.

கடைசி வரை டானி வைட் அரைசதம் அடித்தார். அவரது போராட்டமும் எடுபடவில்லை. 54 ரன்கள் அடித்து கார்ட்னர் பந்தில் அவுட்டானார். இறுதியாக இங்கிலாந்து பெண்கள் அணி 178 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய பெண்கள் அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரை கைப்பற்றியது.

ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லே கார்டனர் இரண்டாவது இன்னிங்சில் மட்டுமே 8 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஒரே டெஸ்ட் இன்னிங்சில் 8 விக்கெட்டுகளை கைப்பற்றிய இரண்டாவது வீராங்கனை ஆவார்.

இதற்கு முன்னர் 1995ஆம் ஆண்டு இங்கிலாந்து பெண்கள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முன்னாள் இந்திய வீராங்கனை நீத்து டேவிட் 8 விக்கெட்டுகளை முதன்முறையாக கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.