இந்திய அணியில் ஜாகிர் கானுக்கு பிறகு இடதுகை வேகப்பந்து வீச்சாளர் இல்லாத குறையை ஓரளவுக்கு இளம் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் நிரப்பி வருகிறார். இந்த நிலையில் அவர் இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதற்கான சூழ்நிலை தற்போது இல்லையென இந்தியாவின் முன்னாள் பந்துவீச்சு பயிற்சி பயிற்சியாளர் பராஸ் மஹாம்பிரே கூறியிருக்கிறார்.
நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் 17 விக்கெட்டுகள் கைப்பற்றி அதிக விக்கெட் கைப்பற்றிய பந்துவீச்சாளராக அர்ஷ்தீப் சிங் வந்தார். குறிப்பாக இறுதிப்போட்டியில் இறுதிக் கட்டத்தில் அவர் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.
மேலும் அவர் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்கின்ற தனது ஆசையை வெளிப்படுத்தி இருந்தார். இத்தோடு பாகிஸ்தான் லெஜெண்ட் வாசிம் அக்ரம் இவரை டெஸ்ட் கிரிக்கெட் விளையாடினால் மட்டுமே மக்கள் ஞாபகம் வைத்துக் கொள்வார்கள் எனவே அவர் அதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
அர்ஷ்தீப் சிங் உள்நாட்டு 16 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 49 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். மேலும் இங்கிலாந்து கவுண்டி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் கென்ட் அணிக்காக ஒப்பந்தமாகி அங்கும் சிறப்பாகவே செயல்பட்டு இருந்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆவதற்காக வேகமாக உழைத்து வருகிறார்.
இந்த நிலையில் அவருக்கான டெஸ்ட் கிரிக்கெட் வாய்ப்பு குறித்து பேசி இருக்கும் இந்திய முன்னாள் பந்துவீச்சு பயிற்சி பயிற்சியாளர் பராஸ் மஹாம்பிரே கூறும்பொழுது ” அவருக்கு வாய்ப்பு கிடைப்பது கண்டிஷனை பொறுத்தது. ஆஸ்திரேலியாவில் நான்கு வேகப் பந்துவீச்சாளர்களுடன் விளையாடும் சூழ்நிலை அமைந்தால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம். ஆனால் இந்தியாவில் விளையாடும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம்.
இதையும் படிங்க :
மேலும் இது அவர் முதல் தர கிரிக்கெட்டில் நேரம் செலவிட வேண்டிய அவசியம் பற்றி இருக்கிறது. அவர் ஸ்விங் கட்டுப்பாடு மற்றும் பந்தை ஸ்விங் செய்வது, சரியான நேரத்தில் ரிவர்ஸ் ஸ்விங்கை பெறுவது போன்றவற்றில் தேர்ச்சி அடைவதற்கு உள்நாட்டு முதல் தர கிரிக்கெட்டில் நேரம் செலவிடுவது உதவும். மேலும் உடல் தகுதியை பராமரித்தல் மற்றும் அதில் பணியாற்றுவது பற்றியது. அவர் தற்போது இந்திய டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் இடத்தில் இல்லை ஆனால் அது வெகு தூரத்திலும் இல்லை” என்று கூறி இருக்கிறார்.