6, 4, 1, 4, 6, 4NB, 4 என ஒரு ஓவரில் 31 ரன்கள் வாரிகொடுத்த அர்ஜுன் டெண்டுல்கர்; பந்தாடிய பஞ்சாப் பேட்ஸ்மேன்கள்! – மும்பைக்கு இதுதான் ட்விஸ்ட் மொமெண்ட்!

0
1032

118 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து மந்தமாக விளையாடி வந்த பஞ்சாப் அணிக்கு, ஒரே ஓவரில் 31 ரன்கள் வாரிக்கொடுத்து மொத்த ஆட்டத்தையும் மாற்றியுள்ளார் அர்ஜுன் டெண்டுல்கர். இறுதியில் 214 ரன்கள் குவித்தது பஞ்சாப் கிங்ஸ்.

வன்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்டு விளையாடி வரும் பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆரம்பத்தில் பிரப்சிமரன் 26 ரன்கள் மற்றும் அதர்வா 29 ரன்கள் அடித்து நல்ல ஆரம்பம் அமைத்துக் கொடுத்தனர்.

- Advertisement -

லிவிங்ஸ்டன் தட்டுதடுமாறி 10 ரன்கள் மட்டுமே அடித்து அவுட் ஆனார். நான்கு விக்கெட்டுகளை இழந்தபிறகு ஐந்தாவது விக்கெட்டிற்கு கேப்டன் ஷாம் கரன் மற்றும் ஹர்ப்ரித் சிங் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

கிட்டத்தட்ட 15 ஓவர்கள் வரை இந்த ஜோடி சற்று அமைதியாக விளையாடி வந்தது. 15 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஸ்கோர் 118 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தவாறு இருந்தது. போட்டியில் முதல் இரண்டு ஓவர்களில் 17 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தார் அர்ஜுன் டெண்டுல்கர்.

தனது மூன்றாவது ஓவரை வீசவந்தார். போட்டியில் 16வது ஓவரை வீசிய அர்ஜுன் டெண்டுல்கர் 31 ரன்களை வாரிக்கொடுத்தார். இந்த ஓவரில் ஷாம் கரன் மற்றும் ஹர்பிரித் சிங் ஜோடி சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளாக விளாசி 31 ரன்கள் குவித்தது. 16 ஓவர்கள் முடிவில் 149 ரன்களுக்கு சென்றது பஞ்சாப் அணி.

- Advertisement -

இந்த ஜோடி அத்துடன் நிற்கவில்லை. போட்டியின் 18ஆவது ஓவரை கேமரூன் கிரீன் வீசினார். அதில் மூன்று சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி உட்பட 25 ரன்கள் விளாசியது. ஹர்பிரித் சிங் 28 பந்துகளில் 41 ரன்களும், சாம் கரன் நான்கு சிக்ஸர்கள் 5 பவுண்டரிகள் உட்பட 29 பந்துகளில் 55 ரன்கள் விலாசி அணியின் ஸ்கோர் 200 பிளஸ் கடப்பதற்கு மிக முக்கிய பங்காற்றினார்.

கடைசியில் வந்த ஜித்தேஷ் சர்மா 7 பந்துகளில் நான்கு சிக்ஸர்கள் உட்பட 25 ரன்கள் விரைவாக அடித்துக் கொடுத்து ஆட்டமிழக்க, 20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 214 ரன்கள் எட்டியது பஞ்சாப் கிங்ஸ் அணி.

215 ரன்கள் எனும் இமாலய இலக்கை துரத்தி வரும் மும்பை அணி 13 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 118 ரன்கள் அடித்துள்ளது.