கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

எங்களுக்கு போட்டியா? பக்கத்தில கூட யாரும் கிடையாது ; அடுத்த வருஷம் ஐபிஎல்-ல 100 போட்டி நடக்கும் – ஐபிஎல் சேர்மன் அதிரடியான பேச்சு!

உலகின் நம்பர் ஒன் டி20 லீக்காக இருக்கும் இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் ஐபிஎல் டி20 லீக்கின் பதினாறாவது சீசன் இந்த வாரம் ஆரம்பத்தில் முடிவுக்கு வந்திருக்கிறது!

- Advertisement -

பத்தாவது முறையாக ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.

இந்த ஆண்டு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இம்பேக்ட் ப்ளேயர் ரூல் மற்றும் டபுள் பிளேயிங் லெவன் ரூல் இரண்டும் ஆட்டத்தில் போட்டித் தன்மையை அதிகரித்ததோடு, ஆட்டத்தின் வெற்றி தோல்வியை டாஸ் நிர்ணயிப்பதைக் குறைத்தது.

இதனால் இந்தத் தொடரில் பல போட்டிகள் விறுவிறுப்பானதாக அமைந்தது. இது ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக இருந்தது. இறுதிப் போட்டியும் கடைசி ஓவரின் கடைசி பந்திலேயே முடிவு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

நிலையில் ஐபிஎல் சேர்மன் அருண் சிங் துமால் பேசுகையில் ” நாங்கள் எங்கள் போட்டியாக வேறு யாரையும் பார்க்கவில்லை. ஐபிஎல் க்கு அருகில் யாருமே இல்லை. சொந்தமாக டி20 லீக் தொடர் தொடங்கும் எல்லா கிரிக்கெட் வாரியங்களுக்கும் எங்கள் வாழ்த்துக்கள். ஆனால் அவர்களில் யாரும் எங்கள் ஐபிஎல் தொடருக்கு அச்சுறுத்தலாக இருக்க முடியாது என்று நான் நம்புகிறேன்.

பல போட்டிகள் விறுவிறுப்பின் உச்சகட்டத்திற்கு சென்றன. கடைசி ஓவர் திரில்லர்கள் ஏராளமாக இருந்தன. ரசிகர்களிடம் இருந்து எங்களுக்கு அற்புதமான வரவேற்பு கிடைத்தது. ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் பார்ட்னர்கள் இருவரும் உற்சாகமாக இருக்கிறார்கள்.

இரண்டு குழுவாகப் பிரித்து, சில அணிகளுடன் மட்டும் ஒரு போட்டி விளையாடுவதற்குப் பதிலாக, எல்லா அணிகளும் எல்லா அணிகளுடனும் இரண்டு போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.

இதனால் போட்டிகள் 74 இல் இருந்து 100 ஆக மாறும். நாங்கள் இது சம்பந்தமாக முடிவெடுப்பதற்கு முன்னால் அணி உரிமையாளர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும். அடுத்த ஐபிஎல் தொடருக்கு இன்னும் பத்து மாதங்கள் உள்ள நிலையில், இது சம்பந்தமாக நடைபெறும் விவாதங்களில் சம்பள வரம்பு உட்பட பல விஷயங்கள் விவாதிக்கப்படும்.

இந்தியாவுக்கு வெளியே தாண்டி கிரிக்கெட்டை வளர்க்க வேண்டியது ஐசிசி யின் வேலை. பிசிசிஐ கடந்த காலங்களில் நிறைய நாடுகளுக்கு உதவி இருக்கிறது. ஆனால் சவுதி அரேபியாவில் டி20 லீக் நடத்தப்படுவதற்கு பிசிசிஐ காரணம் கிடையாது. அது வெறும் யூகங்கள்” என்று தெரிவித்திருக்கிறார்!

Published by