இந்திய கிரிக்கெட்

3 பேருக்கு விதிவிலக்கு.. மற்ற இந்திய வீரர்கள் இதை செய்தே ஆகணும்.. பிசிசிஐ போடவிருக்கும் உத்தரவு.. வெளியான தகவல்

இந்திய அணிக்கு விராட் கோலி கேப்டனாக இருக்கும் வரையில் கூட இந்திய கிரிக்கெட் வாரியத்தில் ஆதிக்கம் செலுத்த முடிந்தது. ஆனால் அவருக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் வாரியத்தில் வீரர்கள் யாராலும் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் பல விஷயங்களில் கட்டுப்பாடுகளை இறுக்கமாக்கி வருகிறது. இந்த வகையில் புதிய உத்தரவு ஒன்று வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் ரஞ்சி டிராபியில் தங்கள் அணிகளுக்காக விளையாடாத இஷான் கிஷான் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் இந்திய அணிகளில் தேர்வு செய்யப்படுவது நிறுத்தப்பட்டது. மேலும் தேர்வுக்குழு பரிந்துரைப்படி இவர்கள் இருவரும் சம்பள பட்டியலில் இருந்தும் நீக்கப்பட்டார்கள்.

இதற்கு அடுத்து இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா உள்நாட்டில் நடைபெறும் எல்லாவிதமான கிரிக்கெட் தொடர்களிலும் காயம் இருக்கும் வீரர்கள் மற்றும் இந்திய அணிக்கு தொடர்ந்து விளையாடும் வீரர்கள் தவிர மற்ற எல்லோருக்கும் மற்ற எல்லோரும் பங்கேற்க வேண்டும் என்கின்ற உத்தரவு பிறப்பித்தார்.

இந்த நிலையில் ஹர்திக் பாண்டியாவுக்கு இந்த உத்தரவு பொருந்துமா? என்று கேட்கப்பட்டது. நிச்சயமாக அவர் ஓய்வில் இருக்கும் பொழுது இந்தியாவில் வெள்ளைப் பந்து தொடர்கள் உள்நாட்டில் நடைபெற்றால் அதில் கலந்து கொள்வார் என்று இந்திய கிரிக்கெட் வாரிய தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டது.

- Advertisement -

இந்த நிலையில் செப்டம்பர் இரண்டாம் தேதி முதல் துவங்கி நடைபெற இருக்கும் உள்நாட்டு டெஸ்ட் தொடர் துலிப் டிராபியில் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெறும் எல்லா வீரர்களும் பங்கு பெற்று விளையாட வேண்டும், குறைந்தபட்சம் ஒரு போட்டியிலாவது விளையாட வேண்டும் என இந்திய கிரிக்கெட் வாரியம் விரும்புவதாக செய்திகள் தெரிவிக்கிறது.

இதையும் படிங்க : டி20 உலககோப்பை பைனல்.. 30 பந்துக்கு 30 ரன்.. அப்ப இப்படித்தான் இருந்தேன் – ரோகித் சர்மா ஓபன் டாக்

அதே சமயத்தில் பணிச்சுமை காரணமாக ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா மூவருக்கும் விதிவிலக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் மூவரும் விரும்பினால் விளையாடலாம் என்றும் இல்லையென்றால் ஓய்வு எடுக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ரவிச்சந்திரன் அஸ்வின், துருவ் ஜுரல் மற்றும் சர்பராஸ் கான் போன்றவர்கள் விளையாடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -
Published by
Tags: BCCI