விராட்கோலி பதவி விலகல் குறித்து உணர்ச்சிபூர்வமாக இன்ஸ்டகிரம் வலைதளத்தில் பதிவிட்ட அனுஷ்கா ஷர்மா – தமிழாக்கம் இணைப்பு

0
1531
Anushka Sharma about Virat Kohli

கேப்டன் விராட் கோலி கடந்த ஆண்டு டி20 போட்டிகளில் கேப்டனாக தொடரப் போவதில்லை என்று கூறியிருந்தார். அதன் பின்னர் பிசிசிஐ ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டனாக ரோஹித் ஷர்மாவை நியமித்தது. டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே கேப்டனாக தலைமை ஏற்று விராட் கோலி விளையாடி வந்த நிலையில் நேற்று டெஸ்ட் போட்டிகளில் கூட இனி கேப்டனாக தான் நடிக்கப்போவதில்லை என்று கூறி அதிர்ச்சி அளித்தார்.

விராட் கோலியை இனி கேப்டனாக எந்த ஒரு போட்டியிலும் பார்க்கமுடியாது என்கிற ஏக்கத்தில் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி பல்வேறு ரசிகர்கள் இருக்கும் நிலையில் அவரது மனைவி அனுஷ்கா ஷர்மா தன்னுடைய இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் அவரைப் பற்றி உணர்ச்சி பூர்வமாக ஒரு பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

2014 முதல் இன்று வரை நான் உங்களை பார்த்து வருகிறேன்

உனக்கு நன்கு ஞாபகம் இருக்கிறது 2014 ஆம் ஆண்டு ஒரு நாள் நீங்கள் என்னிடம் வந்து இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக நான் பதவி ஏற்பு போகிறேன் என்று கூறினீர்கள். நீங்கள், எம்எஸ் தோனி மற்றும் நான் மூவரும் இணைந்து அந்த நாளில் பேசியவை என்றும் நான் நினைவில் வைத்திருக்கிறேன். எப்படி இவ்வளவு சீக்கிரமாக உங்களுடைய தாடி முடி நரைக்க தொடங்கியுள்ளது என்று விவாதித்தோம். நாம் மூவரும் அதைப்பற்றிப் பேசி சிரித்த தருணங்கள் இன்றும் என்னால் மறக்க முடியவில்லை.

அன்றிலிருந்து இன்று வரை உங்களுடைய உங்களுடைய தாடி முடி நரைப்பதை மட்டும் நான் பார்க்கவில்லை. உங்களுடைய அளவில்லாத வளர்ச்சியை நான் அன்றிலிருந்து இன்றுவரை பார்த்து வருகிறேன். இந்திய அணிக்காக ஒரு வீரராக மற்றும் கேப்டனாக நீங்கள் படைத்த சாதனைகளை நினைத்துப் பெருமைப்படுகிறேன்.

2014 ஆம் ஆண்டு உங்களுக்கும் எனக்கும் அவ்வளவு பெரிய வயதாகி விடவில்லை. இருப்பினும் நீங்கள் எடுக்கும் முடிவுகள், யோசனைகள் மற்றும் உங்களுடைய சிந்தனை செயல் என அனைத்தும் நல்வழியில் மட்டுமே இருக்கும். அவை அனைத்தும் நெகட்டிவாக அல்லாமல் பாசிட்டிவாக மட்டுமே இருக்கும். உங்களுடைய பாதையில் தவறான சிந்தனை மற்றும் செயல்களை இதுவரை நீங்கள் அனுமதித்ததில்லை, அதை நினைத்து பெருமை கொள்கிறேன்.

- Advertisement -

போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்கிற உங்களுடைய வேகம் எந்த அளவுக்கு இருக்குமோ, அதேபோல ஒரு போட்டியில் அணி தோல்வி அடைந்துவிட்டால் உங்களுடைய வருத்தம் எந்த அளவுக்கு இருக்கும் என்பதை உங்கள் பக்கத்தில் இருந்த நான் பார்த்திருக்கிறேன். கண்களில் கண்ணீருடன் அணி வெற்றி பெற இன்னும் ஏதாவது செய்திருக்கலாம் என்பது போல நீங்கள் யோசித்துக் கொண்டிருப்பீர்கள். இதுதான் நீங்கள், இதை அவ்வளவு எளிதில் மற்றவர்கள் புரிந்து கொள்ள வாய்ப்பு இல்லை.

எப்பொழுதும் நீங்கள் 100 சதவீதம் முழுமையாக இருந்ததில்லை. மனிதர்களைப்போல உங்களிடமும் சில குறை நிறைகள் இருக்கும்,இருந்தது. உங்களுடைய குறைகளை நீங்கள் மறைக்க முயற்சி செய்தது இல்லை மாறாக அதை எப்படி சரி செய்வது என்கிற சிந்தனையில் மட்டுமே நீங்கள் இருந்தீர்கள். அதில் பல முறை நீங்கள் ஜெயித்தும் இருக்கிறீர்கள். உங்களிடம் எந்த வித பேராசையும் இன்றுவரை நான் பார்த்ததில்லை.

நீங்கள் நான் மற்றும் எனது காதல் எல்லை அற்றது. நீங்கள் நம்முடைய மகளின் தந்தையாக இந்த ஏழு வருடங்களில் இருந்து வந்ததை பின்னாளில் அவள் காண்பாள்.

இவ்வாறு விராட் கோலியின் புகைப்படத்தை பதிவேற்றி அவரை பற்றி உணர்ச்சி பூர்வமாக அனுஷ்கா ஷர்மா பதிவிட்ட பதிவு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.