இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அறிவிப்பு.. 2 வருடத்திற்கு பிறகு நட்சத்திர வீரருக்கு இடம்!

0
1178
Indvswi2023

1970களில் உலகக் கிரிக்கெட்டில் தனி ஆதிக்கத்தை செலுத்தி வந்த வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் படிப்படியாக சரிந்து இன்று மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. அந்த அணி தொடர்ச்சியாக டி20 உலகக்கோப்பை மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் உலக கோப்பை இரண்டுக்குமான தகுதிச் சுற்று போட்டிகளில் தோல்வி அடைந்து வெளியேறி இருக்கிறது.

ஜிம்பாப்வே நாட்டில் தற்பொழுது நடந்து வரும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்றில் ஜிம்பாப்வே மற்றும் நெதர்லாந்து ஆகிய இரண்டு அணிகளிடமும் லீக் சுற்றில் தோல்வி அடைந்து அதிர்ச்சி அளித்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து எந்த புள்ளிகளும் பெறாமல் சூப்பர் 6 ரவுண்டுக்கு வந்த வெஸ்ட் இண்டீஸ் அணி ஸ்காட்லாந்து மற்றும் இலங்கை ஆகிய அணிகளிடம் தோல்வி அடைந்து பரிதாபமாக ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான வாய்ப்பில் இருந்து வெளியேறியது.

இதற்கு அடுத்து உள்நாட்டில் வலிமையான இந்திய அணிக்கு எதிராக மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாட இருக்கிறது. ஒரு பெரிய தோல்வியை மறந்து உடனடியாக ஒரு பெரிய வலிமையான அணிக்கு எதிராக விளையாட வேண்டிய சூழ்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் இருக்கிறது.

இந்தியாவுக்கு எதிராக உள்நாட்டில் முதலில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் வெஸ்ட் இண்டீஸ் விளையாடுகிறது. இதன் முதல் போட்டி டொமினிக்காவில் வருகின்ற 12ஆம் தேதி துவங்கி நடைபெற இருக்கிறது. நட்சத்திர வீரர்கள் உலகக்கோப்பை தகுதி சுற்றில் இருந்து நாடு திரும்பியிருக்கிறார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு எப்படியான வெஸ்ட் இண்டீஸ் அணி அமைக்கப்படும் என்பது எல்லோருக்கும் ஒரு எதிர்பார்ப்பான விஷயமாக இருந்து வருகிறது. அவர்களிடம் இதற்கான வீரர்கள் இருக்கிறார்களா அவர்கள் தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் இருப்பார்களா என்பதெல்லாம் தற்பொழுது பேச்சாக மாறியிருக்கிறது.

இந்த நிலையில் இந்த டெஸ்ட் தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள 15 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணியில் இருந்து எந்த 11 பேர் தேர்வு செய்யப்பட்டு விளையாடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று பார்க்கலாம்.

வெஸ்ட் இண்டீஸ் ஏ அணியின் பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தில் மிகச் சிறப்பாக விளையாடிய கிரிக் மெக்கன்சி கேப்டன் கிரேக் பிராத்வெயிட்டு உடன் துவக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் என்று தெரிகிறது. அடுத்த இடத்தில் ஜூனியர் சந்தர்பால் வருவார். நான்காவது இடத்தில் அதே பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தில் சிறப்பாக விளையாடிய ஆத்தனஷ் அறிமுகமாவார் என்று தெரிகிறது.

இந்தப் போட்டியில் ஐந்தாவது இடத்தில் துணை கேப்டன் ஜெமிம் பிளாக்வுட், ஆறாவது இடத்தில் விக்கெட் கீப்பர் ஜோசுவா சில்வா, ஏழாவது இடத்தில் ஜேசன் ஹோல்டர், எட்டாவது இடத்தில் இரண்டு வருடத்திற்கு பிறகு அணிக்கு அழைக்கப்பட்டுள்ள சுழற் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் கார்னிவல், மற்ற மூன்று இடங்களுக்கு கெமார் ரோச், அல்ஜாரி ஜோசப், ரேமான் ரெபர் ஆகியோர் இடம் பெறுவதற்கு அதிகபட்ச வாய்ப்புகள் இருக்கிறது.