இந்திய கிரிக்கெட்

ரிஷப் பண்ட் கருண் நாயருக்கு நடுவே சுவாரசிய போட்டி.. கம்பீர் புத்திசாலியாக இருப்பாரா? – என்ன நடக்கிறது

தற்போது இந்திய டெஸ்ட் அணியில் ரிஷப் பண்ட் மற்றும் கருண் நாயர் இருவருக்கும் இடையில் ஒரு சுவாரசியமான போட்டி மறைமுகமாக சென்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இதில் தலைமை பயிற்சியாளர் கம்பீர் புத்திசாலித்தனமான முடிவை எடுக்க வேண்டும் என கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

- Advertisement -

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே வருகின்ற ஜூன் இருபதாம் தேதி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி லீட்ஸ் மைதானத்தில் துவங்குகிறது. இந்த போட்டிக்கு இன்றைய பேட்டிங் ஆர்டர் எப்படி அமையும்? என்பது சுவாரசியமானதாக இருக்கிறது.

கை கொடுக்கும் பேட்டிங்

தற்போது இங்கிலாந்தின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர்கள் காயத்தின் காரணமாக இருக்கின்ற காரணத்தினால் அவர்களது பவுலிங் யூனிட் பலவீனமாக இருக்கிறது. எனவே இதை இந்திய பேட்டிங் யூனிட் கட்டாயம் பயன்படுத்தி கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறது. இதை செய்யும் பொழுது இந்திய பவுலிங் யூனிட் மீதான அழுத்தத்தையும் எடுக்க முடியும்.

எனவே இந்திய அணி நிர்வாகம் சரியான வீரர்களை சரியான பேட்டிங் வரிசையில் வைக்க வேண்டிய தேவை இருக்கிறது. ஆட்டத்தை பில்டப் செய்யக்கூடியவர்களுக்கும், ஆட்டத்தை அதிரடியாக எடுத்துச் செல்லக்கூடிய அவர்களுக்கும் சரியான இடங்களை கொடுப்பது மிகவும் முக்கியம்.

- Advertisement -

ரிஷப் பண்ட் கருண் நாயர் போட்டி

கடந்த சில டெஸ்ட் தொடர்களாக ரிஷப் பண்ட் ஆறாவது இடத்திற்கு பதிலாக ஐந்தாவது இடத்தில் முன்னே வந்து பேட்டிங் செய்து கொண்டிருக்கிறார். ஆறாவது இடத்தில் அவர் களமிறங்கும் பொழுது அதிரடியாக விளையாடுவதற்கு லைசென்ஸ் உடனடியாக இருந்தது. ஆனால் ஐந்தாவது இடத்தில் வந்து பேட்டிங் செய்யும்பொழுது சில நேரங்களில் அவர் பொறுமையாக விளையாட வேண்டிய அவசியம் உருவாகிறது.

இதையும் படிங்க : பவுமா கையில இருக்க கோப்பை என் கையில இருக்கணும்.. ஆனா இந்த முறை விடமாட்டோம் – இலங்கை கேப்டன் உறுதி

அதேசமயத்தில் பேட்டிங் வரிசையில் கருண் நாயர் நான்காவது அல்லது ஐந்தாவது இடத்தில் விளையாடக்கூடியவராக இருக்கிறார். அவரால் பொறுமையாக இன்னிங்சை எடுத்துச் செல்ல முடியும். எனவே இந்த முறை கம்பீர் புத்திசாலித்தனமாக செயல்பட்டு கருண் நாயரை ஐந்தாவது இடத்தில் வைத்து, ரிஷப் பண்ட்டை மீண்டும் அதிரடியாக விளையாடுவதற்கு ஆறாவது இடத்திற்கு கொண்டுவர வேண்டும் என கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகிறார்கள். கம்பீர் இதில் புத்திசாலித்தனமான முடிவை எடுப்பாரா? என்று பார்க்க வேண்டும்.

- Advertisement -
Published by