சாய் சுதர்சன் டெஸ்ட் ஆவரேஜ் 39தான்.. ஆனா அவரை தேர்வு செய்ய காரணம் ஐபிஎல்லா? – அகர்கர் கூறிய காரணம்

0
728
Sai

இங்கிலாந்து டெஸ்ட் தொடர்பான இந்திய அணியில் சாய் சுதர்சன் தேர்வு எதனால் செய்யப்பட்டது என்பது குறித்து இந்திய தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம் அளித்திருக்கிறார்.

இன்று இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு சுப்மன் கில் தலைமையில் 18 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் சாய் சுதர்சன் மற்றும் அர்ஸ்தீப் சிங் ஆகியோருக்கு முதல் வாய்ப்பு இந்திய டெஸ்ட் அணியில் கொடுக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

சாய் சுதர்சனின் சுமாரான ஆவரேஜ்

சாய் சுதர்சன் உள்நாட்டில் சிவப்பு பந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் 29 போட்டிகளில் 49 இன்னிங்ஸ் விளையாடி 1957 ரன்கள் எடுத்திருக்கிறார். இதில் ஏழு சதங்களும் ஐந்து அரை சதங்களும் அடக்கம். ஆனால் இவரது ரன் ஆவரேஜ் வெறும் 39 ஆக மட்டுமே இந்த வடிவத்தில் இருக்கிறது.

அதே சமயத்தில் உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் இவருடைய ஆவரேஜ் 60 எனவும், ஒட்டு மொத்த டி20 கிரிக்கெட்டில் 43 எனவும் மிகச் சிறப்பாக இருக்கிறது. இப்படி குறைந்த ஆவரேஜ் சிவப்பு வந்து கிரிக்கெட்டில் இருக்கும் சாய் சுதர்சன் எதற்காக இந்திய டெஸ்ட் அணியில் தேர்வு செய்யப்பட்டார்? என்பது குறித்து கேள்விகள் என ஆரம்பித்திருக்கிறது. மேலும் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 600 ரன்கள் தாண்டி எடுத்தது தான் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தேர்வு செய்ய காரணமா? என்றும் கேட்கப்படுகிறது.

- Advertisement -

ஐபிஎல் தொடர் காரணமா?

இதுகுறித்து பேசி உள்ள அகர்கர் கூறும் பொழுது “கடந்த ஆண்டு இங்கு இங்கிலாந்து லயன்ஸ் அணி வந்த பொழுது அவர் சிறப்பாக விளையாடி 200க்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்தார். அவர் சிவப்பு பந்து வடிவத்தில் ரன்கள் எடுக்க வில்லை என்று சொல்ல முடியாது. நாங்கள் அவரை ஐபிஎல் காரணமாக தேர்வு செய்யவில்லை. அவர் சிறந்த சிவப்பு பந்து கிரிக்கெட் வீரர். அவர் சரியான மனநிலையை காட்டி இருக்கிறார். உயர்மட்ட கிரிக்கெட்டில் வெற்றி பெறுவதற்கு தேவையான விளையாட்டு இருப்பதாக தெரிகிறது”

இதையும் படிங்க : அகர்கர் செஞ்சது விசித்திரமா இருக்கு.. இந்திய டெஸ்ட் டீம் பாவம்.. அதை எதிர்பாக்காதீங்க – மஞ்ச்ரேக்கர் விமர்சனம்

“அவர் விளையாட ஆரம்பித்ததும் இது குறித்து நாம் இன்னும் விளக்கமாக தெரிந்து கொள்ள முடியும். நிச்சயமாக நாங்கள் அவரை ஐபிஎல் தொடரில் விளையாடுவதை வைத்து தேர்வு செய்யவில்லை. நாங்கள் சிறிது காலமாகவே அவரை பார்த்து வருகிறோம். மேலும் நான் இந்த பொறுப்பில் கடந்த இரண்டு வருடங்களாக இருக்கிறேன். அவரை முன்பே தேர்வு செய்திருக்க முடியும் ஆனால் அணியில் இடமில்லை. இப்பொழுதுதான் அதற்கான நேரம் அமைந்திருக்கிறது. அவர் நிச்சயம் இதற்கு தகுதியானவர்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -