நடப்பு ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு காலியாக இருக்கும் ஒரு இடத்திற்கு மும்பை, டெல்லி மற்றும் லக்னோ அணிகள் போட்டியிடுகின்றன. இந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற என்ன செய்ய வேண்டும்? என்று பார்க்கலாம்.
நேற்று குஜராத் அணி டெல்லி அணிக்கு எதிராக வெற்றி பெற்றது மூலம், குஜராத், ஆர்சிபி மற்றும் பஞ்சாப் என மூன்று அணிகள் ஒரே நேரத்தில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின. பிளே ஆப் சுற்றில் நான்கு அணிகளுக்கான இடத்திற்கு மூன்று அணிகள் தேர்வாகிவிட்டன. மீதமுள்ள ஒரு இடத்திற்கு மூன்று அணிகள் போட்டியிடுகின்றன.
தற்போது புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி 12 போட்டிகளில் 14 புள்ளிகள் எடுத்து இருக்கிறது. அந்த அணிக்கு இன்னும் டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு எதிராக இரண்டு போட்டிகள் இருக்கிறது.
இதே போல டெல்லி அணி 12 போட்டியில் 13 புள்ளிகள் எடுத்து இருக்கிறது. அந்த அணிக்கு மும்பை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு எதிராக இரண்டு போட்டி மீதம் இருக்கிறது. மேலும் லக்னோ அணி 11 போட்டியில் 10 புள்ளிகள் எடுத்து இருக்கிறது. இந்த அணிக்கு எஞ்சி இருக்கும் மூன்று போட்டிகளில் ஹைதராபாத், குஜராத் மற்றும் ஆர் சி பி அணிகளுக்கு எதிராக விளையாட வேண்டி இருக்கிறது.
முதலில் மும்பை அணியை தனக்கிருக்கும் 2 போட்டிகளையும் வெல்ல வேண்டும, இல்லையென்றால் குறைந்தபட்சம் டெல்லி அணிக்கு எதிரான போட்டியையாவது வெல்ல வேண்டும். டெல்லி அணிக்கு எதிராக வென்றால் டெல்லி வெளியேறிவிடும். மேலும் லக்னோ அணி மூன்று போட்டிகளையும் வென்று இருந்தால், அந்த அணியை விட அதிக ரன் ரேட் இருக்கும் பட்சத்தில் மும்பை முன்னேறும்.
டெல்லி அணியை எடுத்துக் கொண்டால் மீதம் இருக்கும் இரண்டு போட்டிகளையும் வெல்ல வேண்டும். அப்போது அந்த அணி 17 புள்ளிகள் எடுத்து இருக்கும். லக்னோ அணியால் இறுதியாக 16 புள்ளிகள் மட்டுமே எடுக்க முடியும் என்பதால் டெல்லி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி விடும்.
இதையும் படிங்க : 14 கோடி அவருக்கு தந்தது தப்பா.? அந்த வீரரின் நிலைமையை பாருங்க.. உங்களுக்கே நல்லா புரியும் – கோச் டிராவிட் ஆதரவு
இதற்கு அடுத்து லக்னோ அணி மூன்று ஆட்டங்களையும் வென்று 16 புள்ளிக்கு வர வேண்டும். அந்த நேரத்தில் மும்பை மற்றும் டெல்லி 16 புள்ளிகளுக்கு குறைவாக இருக்க வேண்டும். ஒருவேளை மும்பையும் 16 புள்ளிகள் எடுத்து இருந்தால், லக்னோ மும்பையை விட ரன் ரேட்டில் அதிகபட்சமாக இருந்தால், இந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்ல வாய்ப்புகள் உண்டு. இப்போதைக்கு மூன்று அணிகளில் மும்பைக்கு அதிகபட்ச வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.