ஆர்சிபி ரசிகர்களே.. உங்கள் லீடர்ஸ் சுயநலமா இல்லாம இருந்தா கப் அடிச்சி இருக்கலாம் – அம்பதி ராயுடு விமர்சனம்

0
61
Ambati

நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் கடைசியாக மோதிக்கொண்ட போட்டியில் இருந்து நிறைய சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டு வருகின்றன. தற்போது சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர்கள் ஆர்சிபி அணியை விமர்சனம் செய்து வருகிறார்கள். இன்று அம்பதி ராயுடு அப்படியான ஒரு விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார்.

இரு அணிகளுக்கும் இடையே நடந்து முடிந்த போட்டியில் ஆர்சிபி அணி வெற்றி பெற்றது. இதற்குப் பிறகு மைதானத்தில் வீரர்கள் அதிகப்படியான கொண்டாட்டத்தில் ஈடுபட்டது, மைதானத்திற்கு வெளியே ஆர்சிபி ரசிகர்கள் சிஎஸ்கே ரசிகர்களிடம் தவறாக நடந்து கொண்டது பல விமர்சனங்களை உருவாக்கி இருக்கிறது.

- Advertisement -

மேலும் விராட் கோலி களத்தில் அன்று மிக ஆக்ரோஷமாக காணப்பட்டார். மேலும் மைதானத்தில் இருந்த சிஎஸ்கே ரசிகர்களை பார்த்து அவர் சைலன்ஸ் என்று சைகை செய்தார். இதன் காரணமாக சிஎஸ்கே ரசிகர்கள் சமூக வலைதளத்தில் விராட் கோலியை நிறைய விமர்சனம் செய்து வருகிறார்கள்.

இது ஒரு பக்கம் இருக்க சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் அம்பதி ராயுடு ஏற்கனவே இதுகுறித்து ஆர்சி பி அணியை கொஞ்சம் கடுமையாகவே விமர்சனம் செய்திருந்தார். சிஎஸ்கே அணியை வெல்வதால் மட்டுமே கோப்பை கிடைத்து விடாது என்று கூறியிருந்தார்.

தற்போது மேலும் இது தொடர்பாக பேசி இருக்கும் அம்பதி ராயுடு கூறும் பொழுது “பல ஆண்டுகளாக ஆர்சிபி அணியை தொடர்ந்து ஆதரித்து வரும் அந்த அணியின் ரசிகர்கள் பக்கமாக என் இதயம் செல்கிறது. தனிப்பட்ட சாதனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், ஆர்சிபி அணி நிர்வாகமும் அதன் தலைவர்களும் அணியின் நலனை முதன்மையாக கொண்டிருந்தால், இந்நேரத்திற்கு அந்த அணி பல பட்டங்களை வென்று இருக்கும்.

- Advertisement -

இதையும் படிங்க : அமெரிக்கா கிட்ட தொடரை தோற்போம்னு நினைக்கல.. அவங்க வசதியே செஞ்சி தரல – ஷாகிப் அல் ஹசன் புலம்பல்

ஆர்சிபி அணியில் இருந்து எத்தனை அற்புதமான வீரர்கள் வெளியேற்றப்பட்டார்கள் என்று நினைத்துப் பாருங்கள். அணியின் நலனை முதன்மைப்படுத்தும் வீரர்களை அணிக்குள் கொண்டு வர உங்கள் நிர்வாகத்தை கட்டாயப்படுத்துங்கள். மெகா ஏலத்திலிருந்து ஒரு புதிய பெரிய அத்தியாயத்தை தொடங்கலாம்” என்று கூறியிருக்கிறார்.