நேற்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கேகேஆர் வீரர் கேமரூன் கிரீன் பந்து வீசவில்லை. இதற்குப் பின்னணியில் இருக்கும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தை அம்பதி ராயுடு விமர்சனம் செய்துள்ளார்.
இந்த போட்டியில் கே கே ஆர் அணி முதலில் பேட்டிங் செய்து 2020 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா மற்றும் ரியான் ரிக்கல்டன் அதிரடியில் எளிதாக வெற்றி பெற்றது.
இந்த ஐபிஎல் தொடருக்கு சில மாதங்களுக்கு முன்பாக கேமரூன் கிரீன் முதுகில் அறுவை சிகிச்சை செய்திருந்தார். இதன் காரணமாக அவர் ஆசஸ் டெஸ்ட் தொடரில் மொத்தம் 62 ஓவர்கள்தான் பந்துவீசி இருந்தார். எனவே ஐபிஎல் தொடரில் அவர் ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமே விளையாடுவார் என ஆஸ்திரேலியா அனுப்பி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அம்பதி ராயுடு பேசும் பொழுது ” நான் கிரிக்கெட் விளையாட ஆரம்பிக்கும் பொழுது ஹெல்மெட் அணிந்து விளையாடுவது எனக்கு பிடிக்காது. ஆனால் என் அம்மா ஹெல்மெட் இல்லாமல் விளையாட அனுமதிக்க மாட்டார். இதன் காரணமாக என் அம்மா என் மகன் காயம் அடைந்து விடுவான் என்று கூறி ஒப்பந்தத்தை அமைக்க முடியாது”
“அவர் கவர் டிரைவ் ஆடுவார்தானே? அப்போது கூடதான் முழங்கையில் காயம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. இதற்காக ஒருவேளை அவர் பந்தை லேசாக தட்டி விடுவாரா? ஒரு வீரர் ஒரு தொடரில் பங்கேற்க வரும் பொழுது அவர் இதை செய்யலாம் செய்யக்கூடாது என்று சொல்வது சுத்த முட்டாள்தனம். ஒரு தொழில் முறை சூழலில் இப்படி நடக்கவே கூடாது
இதையும் படிங்க : ரோகித் கிட்ட இதை செய்யாதீங்கப்பா.. ரூல்ஸ ஃபாலோ பண்ணுங்க பண்ணுங்கனு சொன்னா கேட்கிறது இல்லை – அஸ்வின் கருத்து
“அதேசமயத்தில் இது ஒரு வீரர் எடுக்க வேண்டிய முடிவு. இந்த தொழில்முறை தொடரில் விளையாடும் போது தன்னால் என்ன செய்ய முடியும்? என்பது குறித்து ஒரு வீரர் தான் முடிவு செய்ய வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.