இந்திய கிரிக்கெட்

பாகிஸ்தானுக்கு சொன்ன அதே பாடம்.. சிஎஸ்கேவுக்கும் இஷான் கிஷான் நடத்தி இருக்கிறார்.. வேற மாதிரியானவர் – அம்பதி ராயுடு பாராட்டு

நேற்று சிஎஸ்கே அணிக்கு எதிராக ஹைதராபாத் வீரர் இஷான் கிஷான் 47 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருது வென்றார். இவரது பேட்டிங் குறித்து அம்பதி ராயுடு பாராட்டி பேசி இருக்கிறார்.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே 180 ரன்கள் எடுத்தது. மெதுவான ஆடுகளத்தில் இந்த ஸ்கோர் சிறப்பானதாக அமைந்தது. ஆனால் இஷான் கிஷான் மிகவும் பொறுப்பாக விளையாடி சிஎஸ்கே அணி இடம் இருந்து வெற்றியை பறித்து விட்டார்.

பாகிஸ்தான் பாடம்

நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராகவும் இதே போல மெதுவான ஆடுகளம் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த அணியில் மொத்தம் ஐந்து சுழல் பந்துவீச்சாளர்கள் இருந்தார்கள். ஆனாலும் இஷான் கிஷான் அதிரடியாக விளையாடி தனி ஒரு வீரராக போட்டியை பறித்து இந்தியா கைகளில் கொடுத்தார்.

இதுகுறித்து அம்பதி ராயுடு பேசும்போது “டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் இப்படிப்பட்ட ஒரு கடினமான ஆடுகளமே கொடுக்கப்பட்டிருந்தது. அந்த ஆடுகளத்திலும் இஷான் கிஷான் தானாக பொறுப்பேற்றுக் கொண்டு விளையாடி இந்திய அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தார்”

- Advertisement -

இவர் இப்படி மாறிவிட்டார்

“இந்த வகையில் பார்க்கும்போது இஷான் கிஷான் கடினமான ஆடுகளங்களுக்கு தன்னை மாற்றிக்கொண்டு விளையாடும் அளவுக்கு முதிர்ச்சி அடைந்த பேட்ஸ்மேன் ஆக மாறி இருக்கிறார். தற்போது அவர் எந்த அணிக்கு விளையாடினாலும் அந்த அணிக்கு அது பலமாக மாறுகிறது. கம்மின்ஸ் இல்லாதபோது கூட ஹைதராபாத் அணியை அவர் சிறப்பாகவே வழி நடத்தினார்”

இதையும் படிங்க: எங்களை விட்டு மறைந்த சகோதரியை நினைத்தேன்.. சிஎஸ்கே கதையை இப்படித்தான் முடித்தேன் – இஷான் கிஷான் பேச்சு

“இன்று கிளாசன் ஒரு பக்கமாக அதிரடியாக விளையாடினால் கூட இஷான் தன்னை மிகவும் அமைதியாக வைத்துக் கொண்டார். சரியான பவுலர்களையும் பந்துகளையும் தேர்ந்தெடுத்து அவர் புத்திசாலித்தனமாக சூழ்நிலைக்கு தகுந்தது போல் விளையாடினார். இந்த வெற்றிக்கு அவருடைய பங்கு மிகப் பெரியது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by