“நான் இந்தியா கூட சண்டை போட போகலங்க.. என்னை விட்டுருங்க..!” – ஹாரிஸ் ரவுப் சரண்டர்.. பின்னணி என்ன?

0
7681
Rauf

இந்தியாவில் உலகக்கோப்பை அக்டோபர் ஐந்து முதல் களைக்கட்ட ஆரம்பிக்க இருக்கிறது. எனவே கிரிக்கெட் ரசிகர்கள் ஒருபுறத்தில் பெரிய எதிர்பார்ப்பில் இருக்க, அவர்களது எதிர்பார்ப்பை அதிகரிக்கும் விதமாக மீடியாக்கள் செயல்பட ஆரம்பித்திருக்கிறது!

எப்பொழுது உலகக் கோப்பைத் தொடர் எந்த வடிவத்தில் நடைபெற்றாலும் இந்தியா பாகிஸ்தான் மோதிக் கொள்ளும் போட்டிக்கு மிகப்பெரிய சந்தை மதிப்பு இருக்கும். நடக்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரும் அதற்கு விதிவிலக்கு கிடையாது!

- Advertisement -

இந்தியா பாகிஸ்தான் அணிகள் நடக்க இருக்கும் உலக கோப்பையில் அக்டோபர் 14ஆம் தேதி குஜராத் அகமதாபாத் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதன் காரணமாக எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்து இருக்கிறது.

பாகிஸ்தான் அணியைப் பொறுத்தவரை எடுத்துக் கொண்டால் ஆசியக் கோப்பைக்கு முன்பு அவர்களது நம்பிக்கை உச்சத்தில் இருந்தது. ஆனால் ஆசியக் கோப்பைக்கு பின்பு அவர்களது நம்பிக்கை அதல பாதாளத்தில் கிடக்கிறது. மேலும் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் நசீம் ஷா காயத்தால் உலக கோப்பைக்கு வரவில்லை.

ஆனாலும் கூட பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை வேகப்பந்துவீச்சு மிக மோசமான நிலையில் கிடையாது. சராசரியாகவே இருக்கிறது. அவர்கள் பெரும்பாலும் நம்பி வருவது வேகப்பந்துவீச்சைதான். சுழற்பந்துவீச்சுத் துறை ஒட்டுமொத்தமாக மோசமாக இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் இந்தியா பாகிஸ்தான் வீரர்களுக்கு இடையே நல்ல நட்புறவு நீடிக்கிறது. ஆனாலும் கூட ஆசியக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் இஷான் கிஷான் விக்கெட்டை கைப்பற்றி ஆக்ரோஷமான முறையில் வழி அனுப்பி வைத்தார் ஹாரிஸ் ரவுப். இதன் காரணமாக அவரிடம் இந்திய அணிக்கு எதிராக ஆக்ரோஷம் தொடருமா? என்கின்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்து பேசிய ஹாரிஸ் ரவுப் ” நான் எதற்காக இந்தியா போய் இந்தியர்களுடன் சண்டையிட வேண்டும்? இது கிரிக்கெட்; போர் கிடையாது. உங்கள் நாட்டிற்காக நீங்கள் எந்த போட்டியில் விளையாடுவதும் பெரிய விஷயம். எனது உடல் தகுதி முன்பை விட மிகச் சிறப்பாக இருந்து வருகிறது.

ஒரு அணியாக எங்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. எனக்கு புதிய பந்தை கொடுப்பதா? இல்லை பழைய பந்தை கொடுப்பதா? என்பதை அணி நிர்வாகம் முடிவு செய்யும். என்னிடம் உலகக் கோப்பைக்கு தனிப்பட்ட இலக்குகள் எதுவும் இல்லை. தனிப்பட்ட வீரரின் முக்கியத்துவத்தை விட மொத்த அணியின் நோக்கம்தான் முக்கியமானது!” என்று கூறி இருக்கிறார்!