இந்திய கிரிக்கெட்

முகமது சமி செய்தது பெரிய குற்றம்.. அவர் மக்களுக்கு தவறான செய்தி பரப்புகிறார் – அகில இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர்

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி அரை இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்று தற்போது இறுதி போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. வருகிற ஞாயிற்றுக்கிழமை நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் விளையாட உள்ளது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்திய வேகப் பந்துவீச்சாளர் முகமது சமியை அகில இந்திய முஸ்லீம் ஜமாத்தின் தேசிய தலைவர் மௌலானா ஷஹாபுதீன் ரிஸ்வி குற்றவாளி என்று அழைத்திருக்கிறார்.

இந்திய அணியின் நட்சத்திர பவுலர்

இந்திய அணியின் சிறந்த வேகப்பந்துவீச்சாளராக திகழ்ந்து வரும் முகமது சமி, காயம் காரணமாக பல மாதங்களாக இந்திய அணியை விட்டு விலகி இருந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்து விளையாடி வருகிறார். மேலும் தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அவர் விளையாடி வரும் நிலையில் இக்கட்டான ஆட்டங்களில் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணிக்கு வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார்.

இந்திய அணியுடன் அவரது சிறப்பான ஆட்டத்தின் மூலமாக தற்போது இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறி உள்ளது. இந்த சூழ்நிலையில் முஸ்லிம் மதத்தை சேர்ந்த முகமது சமி, ரம்ஜான் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் விரதம் இருக்கும் போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் இடைவெளியின் போது தண்ணீர் அருந்தினார் என அகில இந்திய முஸ்லீம் ஜமாத்தின் தேசிய தலைவர் மௌலானா ஷஹாபுதீன் ரிஸ்வி அவர் செய்தது தவறு என குற்றம் சாட்டி பேசி இருக்கிறார்.

- Advertisement -

செய்தது பெரிய குற்றம்

இதுகுறித்து அவர் கூறும் போது “கட்டாயக் கடமைகளில் ஒன்று ‘ரோஜா’ எனப்படும் உண்ணாவிரதம் இருக்கும் நிகழ்வாகும். ஆரோக்கியமான ஆணோ ஒரு பெண்ணோ உண்ணாவிரத்தை கடைபிடிக்கவில்லை என்றால் அவர்கள் பெரிய குற்றவாளியாக மாறுகிறார்கள். இந்தியாவின் பிரபல கிரிக்கெட் ஆளுமை முகமது ஷமி ஒரு போட்டியின் போது தண்ணீர் அல்லது வேறு ஏதாவது பானம் ஒன்றை அருந்தி இருக்கிறார். மக்கள் அவரைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதையும் படிங்க:இந்திய அணியை பார்த்து பயப்படறாங்க.. ஆனா நியூசி பிளான் இதுதான்.. நேத்தே காட்டினாங்க – பசித் அலி கருத்து

அவர் கிரிக்கெட் போட்டிகள் விளையாடுகிறார் என்றால், அவர் ஆரோக்கியமாக இருக்கிறார் என்று அர்த்தம். அப்படி இருக்கும்போது அவர் விரதம் இருக்கும் நிகழ்வை கடைபிடிக்கவில்லை. எனவே இது மக்களுக்கு ஒரு தவறான செய்தி பரப்பப்படுவது போன்றதாகும். அவர் இதை செய்திருக்கக் கூடாது. உண்ணாவிரதத்தை கடைபிடிக்காததன் மூலம் அவர் ஒரு குற்றம் செய்து விட்டார். அவர் கடவுளுக்கு பதில் சொல்ல வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by