சுப்மன் கில் செம்ம ஃபார்ம்ல இருக்கான், இங்க பைனல் மட்டுமல்ல.. டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல்லயும் தொடரனும்டா – ரோகித் சர்மா பேட்டி!

0
8786

‘சுப்மன் கில் சிறந்த பார்மில் இருக்கிறார். நாங்கள் நடுவில் எங்களது மொமன்டம் தவறவிட்டோம்.’ என்று போட்டி முடிந்த பிறகு பேட்டி அளித்துள்ளார் ரோகித் சர்மா.

இரண்டாவது குவாலிஃபயர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. முதலின் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு சுப்மன் கில்(129) மீண்டும் ஒருமுறை சதம் அடித்து அபாரமாக ஆடிக்கொடுத்ததால் 20 ஓவர்களில் 233 ரன்கள் குவித்தது.

- Advertisement -

இமாலய இலக்கை துரத்திய மும்பை அணிக்கு சூரியகுமார் யாதவ்(61) நம்பிக்கை அளிக்கும் விதமாக விளையாடி கொடுத்தார். கிரீன்(30) மற்றும் திலக் வர்மா(43) ஆகியோர் கிடைத்த துவக்கத்தை பெரிய ஸ்கோர் ஆக எடுத்துச் செல்ல முடியவில்லை. 18.2 ஓவர்களில் 171 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

மும்பை இந்தியன்ஸ் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவி பைனலுக்குள் செல்லும் வாய்ப்பை தவறவிட்டது. தோல்வி குறித்து போட்டி முடிந்த பிறகு பேட்டி அளித்த ரோகித் சர்மா கூறுகையில்,

“மிகப்பெரிய ஸ்கொர் அடித்துவிட்டார்கள். சுப்மன் கில் அபாரமாக விளையாடினார். இந்த பிட்ச் பேட்டிங் செய்வதற்கு நன்றாக இருக்கிறது. 25 ரன்கள் கூடுதலாக கொடுத்து விட்டோம். இருப்பினும் சேஸ் செய்ய முடியும் என்கிற நம்பிக்கையோடு களமிறங்கினோம்.

- Advertisement -

நன்றாக விளையாடினோம். ஆனால் பார்ட்னர்ஷிப் அமைக்க தவறுவிட்டோம். கிரீன் மற்றும் சூர்யா இருவரும் சிறப்பாக விளையாடிக் கொடுத்தார்கள் ஆனால் மற்றவர்கள் பாதையை தவறவிட்டதால் பெரிய ஸ்கொரை சேஸ் செய்ய முடியவில்லை.

பவர்-பிளே ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகள் தவறவிட்டது. கிரீன் கையில் அடிபட்டது என எதுவும் எங்களுக்கு சாதகமாக அமையவில்லை. எங்களது அணியில் சுப்மன் கில் போன்று ஒருவர் நின்று ஆடியிருந்தால் இந்த இலக்கை சேஸ் செய்து நெருங்கியிருக்க முடியும். அவர் கடைசி ஓவர் வரை கிட்டத்தட்ட ஆட்டத்தை எடுத்துச் சென்றார். இதனால் பெரிய ஸ்கொரை அவர்களால் எட்ட முடிந்தது.

இன்றைய போட்டியில் விளையாடியது மற்றும் மூன்றாவது இடம் பிடித்து சீசனை முடித்தது என்று இதிலிருந்து நம்பிக்கையை பெற்றுக் கொள்வோம். இந்த தொடர் முழுவதும் எங்களுடைய பேட்டிங் நன்றாக இருந்தது. பவுலிங் சில தவறுகள் நேர்ந்து விட்டது. இந்த சீசனில் இளம் வீரர்கள் நன்றாக செயல்பட்டனர். அவர்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள்.

சுப்மன் கில் இன்று ஆடிய ஆட்டத்திற்கு அவருக்கு பாராட்டுக்கள் கொடுக்க வேண்டும். சிறந்த பார்மில் இருக்கிறார். இதனை (டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில்) தொடரவேண்டும்.” என்று சிரித்தபடியே நகர்ந்தார் ரோகித் சர்மா.