இந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வீரர்கள் தங்களுடைய வழக்கமான பேஸ்பால் ஆட்டத்தை தொடங்கி இருக்கிறார்கள். ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி டிரா செய்தாலே தொடரை கைப்பற்றி விடும். ஆனால் இந்திய அணி கண்டிப்பாக போட்டியை வென்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும்.
இந்த நிலையில் இந்தியாவின் முதல் இன்னிங்சில் வெறும் 224 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி பேட்டிங் செய்தபோது ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக செயல்பட்டது. இதனால் இந்திய வீரர்களும் பந்து வீசும் போது இங்கிலாந்து வீரர்கள் நெருக்கடியை சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் யாருமே எதிர்பாராத வகையில் இங்கிலாந்து வீரர்கள் வழக்கம் போல் டி20 கிரிக்கெட் பேட்டிங் ஸ்டைலை வெளிப்படுத்துகின்றன. பந்து ஏதாவது மேஜிக் செய்யும் என எதிர்பார்த்துக்கொண்டு இருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இந்திய அணியின் பந்துவீச்சை இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜாக் கிராலி மற்றும் பென் டக்கட் ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய அணி வீரர்கள் தடுமாறினர். ஒரு கட்டத்தில் சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகாஷ் தீப் என யார் பந்துவீசினாலும் அவர்களுடைய ஓவர்களை இங்கிலாந்து வீரர்கள் அடித்து நொறுக்கினர்.
டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு என்ற ஏதுவான ஆட்டத்தை கைவிட்டு டி20 போட்டிகளில் விளையாடுவது போல் ஸ்கூப் ஷாட், ரிவர்ஸ் ஸ்விச் போன்ற பேட்டிங் ஸ்டைலை வெளிப்படுத்தி ஆதிக்கம் செலுத்தினார். இந்த நிலையில் பென் டக்கட் 43 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆகாஷ் தீப் பந்து ஒன்றை தேவையில்லாமல் ரிவர்ஸ் ஷாட் ஆடி விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனார்.இதன் மூலம் இங்கிலாந்த அணி 92 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்து இருக்கின்றது.
இதையும் படிங்க: அவ்வளவு தான் முடிச்சி விட்டாங்க போங்க.. 6 ரன்களுக்கு 4 விக்கெட் அவுட்.. இந்தியா 224 ரன்களுக்கு ஆட்டமிழ்ப்பு
பென் டக்கட் விக்கெட்டை வீழ்த்தியவுடன் ஆகாஷ் தீப் அவருடைய தோள்பட்டையில் கையை போட்டுக்கொண்டு ஏதோ கிண்டல் செய்வது போல் பேசினார். இதனால் கடுப்பான பென் டக்கட் அவருடைய முகத்தை பார்க்காமலே ஏதோ சொல்லிவிட்டு சென்றார். இது தேவையில்லாத செயல் என்று கிரிக்கெட் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். அவர் ஏற்கனவே பேட்டிங்கில் 38 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்து, ஐந்து பவுண்டரி, இரண்டு சிக்சர் அடித்திருக்கின்றார். அவரை கிண்டல் செய்வது தேவையில்லாத வேலை என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.