ஹர்திக் பாண்டியா இதைச் செய்தால் அணிக்குள் நுழைந்து விடுவார் – வெங்கடேஷ் ஐயரை எச்சரிக்கும் ஆகாஷ் சோப்ரா

0
151
Akash Chopra about Hardik Pandya and Venkatesh Iyer

ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிராக நடந்து முடிந்துள்ள 3 டி20 தொடர்களை 3-0 என்கிற கணக்கில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று அசத்தி வருகிறது. இந்த 3 டி20 தொடர்களிலும் சீனியர் வீரர்களை தவிர்த்து பல இளம் வீரர்களுக்கு நிறைய வாய்ப்பு வழங்கப்பட்டது.

இளம் வீரர்களும் தங்களுடைய வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டனர். இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கும் உலக கோப்பை டி20 தொடரில் 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி பட்டியலை உருவாக்க வேண்டிய சூழ்நிலையில் கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இருக்கின்றனர். நடந்து முடிந்துள்ள தொடர்களின் அந்த நோக்கத்திலேயே சில வீரர்களை இவர்கள் பரிசோதித்து பார்த்து உள்ளனர். அதன் முடிவும் சிறப்பாகவே வந்தமைந்துள்ளது.

- Advertisement -

ஓய்வு எடுத்து வரும் ஹர்திக் பாண்டியா

கடந்த ஆண்டு நடந்த முடிந்த ஐசிசி உலகக் கோப்பை டி20 தொடரின் முதல் ஹர்திக் பாண்டியா ஓய்வு எடுத்து வருகிறார். அவரது உடலை தயார் படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் தாமாக இந்த முடிவை எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஹர்திக் பாண்டியா முன்புபோல கடந்த ஆண்டில் பந்து வீசவில்லை. பேட்டிங் மட்டுமே செய்து வருகிறார். ஒரு ஆல்ரவுண்டர் இடத்தில் விளையாடும் வீரர் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் சிறப்பாக விளையாட வேண்டும். எனவே மீண்டும் முன்புபோல பந்துவீச ஹர்திக் பாண்டியா தயாராகி வருகிறார்.

சிறப்பாக விளையாடி வரும் வெங்கடேஷ் ஐயர்

ஹர்திக் இல்லாத குறையை போக்கும் விதமாக அவரது இடத்தில் வெங்கடேஷ் ஐயரை இந்திய கிரிக்கெட் நிர்வாகம் விளையாட வைத்தது. நடந்து முடிந்துள்ள இரண்டு தொடர்களில் குறிப்பாக மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிராக பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் வெங்கடேஷ் மிக அற்புதமாக விளையாடினார்.

தற்போது உள்ள சூழ்நிலையில் வெங்கடேஷ் ஹர்திக் பாண்டியாவை விட ஒரு படி முன்னிலையில் இருக்கிறார் என்றே சொல்லாம். எனவே ஐசிசி உலக கோப்பை டி20 தொடரில் ஆல் ரவுண்டர் வீரர் இடத்தில் வெங்கடேஷ ஐயர் விளையாடவே அதிக வாய்ப்பு உள்ளதாக ரசிகர்கள் மற்றும் வல்லுனர்கள் ஒரு பக்கம் விவாதித்து வருகின்றனர்.

ஹர்திக் பாண்டியா தான் இறுதியில் வெற்றி பெறுவார்

இது சம்பந்தமாக பேசி உள்ள வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ரா, “தற்போது உள்ள சூழ்நிலையில் வெங்கடேஷ் முன்னணியில் இருந்தாலும் இறுதியில் ஹர்திக் பாண்டியா தான் வெற்றி பெறுவார். ஹர்திக் பாண்டியா முன்புபோல பந்து வீச ஆரம்பித்து விட்டால் நிச்சயமாக அவர் மீண்டும் இந்திய அணியில் தன்னுடைய இடத்தில் விளையாடுவார். நடக்க இருக்கும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி மீண்டும் இந்திய அணியில் நுழைவதே தற்போது ஹர்த்திக் பாண்டியாவின் இலக்கு.

குஜராத் அணியின் கேப்டனாக புதிய அவதாரம் எடுக்க உள்ள ஹர்திக் பாண்டியா நிச்சயமாக இதை செய்து முடிப்பார். அவர் அப்படி மீண்டும் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் சிறப்பாக விளையாட ஆரம்பித்து விட்டாலே, இந்திய அணி அவரை தான் இறுதி நேரத்தில் விளையாட வைக்கும் என்று கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர் ஐசிசி உலக கோப்பை டி20 தொடர் என்பது சாதாரண தொடர் கிடையாது. அதில் நீங்கள் 15 வீரர்களை மட்டுமே அழைத்துச் செல்ல முடியும்.ஆல்ரவுண்டர் இடத்தில் இரண்டு வீரர்கள் மட்டுமே இந்திய அணியில் விளையாட வைக்கப்படுவார்கள். ஸ்பின் பந்து வீசக்கூடிய ஆல்ரவுண்டர் வீரராக ரவீந்திர ஜடேஜா மற்றும் ஃபாஸ்ட் பவுலிங் வீசக்கூடிய ஆல்ரவுண்டர் வீரராக ஹர்திக் பாண்டியா தான் இறுதியில் விளையாடுவார்கள். இதுதான் என்னுடைய கணிப்பு என்பது ஆகாஷ் சோப்ரா இறுதியாக கூறியுள்ளார்.

- Advertisement -