வரவிருக்கும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20ஐ தொடருக்கான இந்திய அணியில் மூத்த ஃபாஸ்ட் பௌலர் புவ்னேஷ்வர் குமார் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது குறித்து, இந்திய அணியின் முன்னாள் பேட்டர் ஆகாஷ் சோப்ரா தனது கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள 16 பேர்கொண்ட இந்திய அணியில் 36 வயதான அனுபவப் பௌலர் புவ்னேஷ்வர் குமார் சேர்க்கப்பட்டுள்ளது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டுக்குப் பிறகு, சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பின் அவர் மீண்டும் இந்திய டி20ஐ அணிக்குத் திரும்பியுள்ளார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக ஐபிஎல் தொடரில் சிறப்பாகச் செயல்பட்டு தொடர்ச்சியாக விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், புவ்னேஷ்வர் குமார் மீண்டும் தனது கம்பேக்கை உறுதி செய்துள்ளார். அவரது இந்தத் திடீர் ரீ-என்ட்ரி குறித்து ஆகாஷ் சோப்ரா தனது யூடியூப் சேனலில் விரிவாகப் பேசியுள்ளார்.
இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா பேசும்போது “அஜித் அகர்கர் இந்தத் தேர்வில் பங்கேற்கவில்லை, அவர் எந்தவொரு தேர்வில் இல்லாத முதல் முறை இதுவேயாகும்; இதன் காரணமாகவே புவி மீண்டும் அணிக்குள் வந்துள்ளார்; இது ஒரு தொடக்கமா, டி20ஐ தொடரில் ஆரம்பித்து அவரை ஒருநாள் போட்டிகளிலும் முயற்சி செய்து 2027 உலகக் கோப்பைக்குத் தயார்படுத்துவார்களா என்ற மிகப்பெரிய கேள்வி எழுகிறது;”
”இருப்பினும் டி20ஐ போட்டிகளில் புவிக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என நாம் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்த நிலையில், அவரது தொடர்ச்சியான சிறப்பான பெர்ஃபார்மன்ஸுக்குத் தகுந்த வெகுமதி கிடைத்துள்ளது என்று கூறி இருக்கிறார்”.






