உலக கோப்பை 2023

சிவம் துபேவை யூஸ் பண்ணினா இனி வேலைக்கு ஆகாது.. சூர்யா 5 மட்டுமே பயன்படுத்துவது நல்லது – ஆகாஷ் சோப்ரா

நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் ஜிம்பாவே அணிகளுக்கு இடையேயான t20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 போட்டியில் இந்திய அணி 72 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் சிவம் டுபேவின் பந்துவீச்சு குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா சில முக்கிய கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 4 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக அபிஷேக் ஷர்மா 30 பந்துகளில் 55 ரன்கள் குவித்தார். அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி ஜிம்பாப்வே அணி விளையாடிய நிலையில் 184 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இருப்பினும் ஜிம்பாப்வே அணி இவ்வளவு ரன்கள் குவிப்பதற்கு சிவம் டுபே வின் பந்து வீச்சு முக்கிய காரணமாக அமைந்தது. 2 ஓவர் மட்டுமே அவர் பந்து வீசிய நிலையில் 46 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றினார். இருப்பினும் கடந்த 3 ஆட்டங்களில் அவரது பந்துவீச்சு சிறப்பாக அமையவில்லை.

- Advertisement -

இது குறித்து ஆகாஷ் சோப்ரா கூறும் போது “கடந்த மூன்று போட்டிகளில் சிவம் துபே 7 ஓவர்களில் 113 ரன்கள் விட்டுக் கொடுத்துள்ளார். இந்த ஆட்டத்தில் இரண்டு ஓவர்களில் 46 ரன்கள் மற்றும் முந்தைய ஆட்டத்தில் மூன்று ஓவர்களில் 35 ரன்கள் விட்டுக் கொடுத்துள்ளார். இதில் பிரச்சனை என்னவென்றால் அவர் ஆறாவது பந்துவீச்சாளர் என்கிற காரணத்தால் அவர் ஓவர்கள் வீச வேண்டிய நிலையில் உள்ளது. இதில் திலக் வர்மா மற்றும் அபிஷேக் ஷர்மா பவுலிங் வேலை செய்யப்போவதில்லை.

எனது 6வது பவுலராக சிவம் தூபே அதிக ரன்கள் விட்டுக் கொடுப்பது இங்கே ஒரு பிரச்சனை. இந்திய அணி 5 பந்துவீச்சாளர்கள் மட்டும் பயன்படுத்துவதாக இருந்தால் மோசமான நாள் ஏற்படாது. ஒருவேளை உங்களுக்கு ஆறாவது பவுலர் தேவைப்பட்டால் சிவம் துபே மீது நம்பிக்கை வைக்க முடியாது” என்று அவர் பேசி இருக்கிறார்.

- Advertisement -
Published by