இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியுள்ளது. இது தற்போது இந்திய அணி மீது பல விமர்சனங்களை எழுப்பி இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா இந்தியா பேட்டிங் குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி தோல்வி
ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்டு மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பகல் இரவு ஆட்டமான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 180 ரன்கள் குவிக்க அதற்குப் பிறகு முதல் இன்னிங்ஸ் துவங்கிய ஆஸ்திரேலியா 337 ரன்கள் குவித்தது. அதற்குப் பிறகு இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் நிலைத்து நின்று விளையாடாமல் விக்கெட்டுகளை விரைவில் இழந்ததால் இரண்டாவது இன்னிங்ஸில் 175 ரன்களில் ஆட்டம் இழந்தது.
அதற்குப் பிறகு ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிங்சில் 19 ரன்கள் குவித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுத்தது. இரண்டாவது இன்னிங்ஸ் ஆடிய இந்திய அணிக்கு ஆடுகளம் ஓரளவு சாதகமாக இருந்தாலும் அதனை பயன்படுத்திக் கொள்ள தவறியதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
ஒருவர் கூட இதை செய்யவில்லை
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “எங்கே தவறு செய்தோம்? இது ஒரு பெரிய கேள்வி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஒரு முறை அல்ல இரண்டு முறையும் பேட்டிங்கில் தவறு செய்தோம். முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்ய எடுத்த முடிவு சரியானது. முதல் இன்னிங்ஸ் 70 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனபோது இவ்வாறு நடக்கும் என்று முன்னரே தோன்றி இருக்கலாம். இருப்பினும் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணிக்கு ஆடுகளம் பேட்டிங் செய்ய சாதகமாக அமைந்தது.
இதையும் படிங்க:முன்னாள் வெற்றி கோச்சா சொல்றேன்.. ரோகித் இந்த 2 விஷயத்தை ஆஸியில் செய்யணும் – ரவி சாஸ்திரி அறிவுரை
முதல் இன்னிங்ஸில் ஆடுகளம் பந்துவீச்சுக்கு ஓரளவு சாதகமாக இருந்தது. ஒரு டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் 80 ஓவர்கள் வரை ஆட வில்லை என்றால் அங்குதான் பிரச்சனை. 80 முதல் 100 பந்துகள் வரை விளையாடுவேன் என்று சொல்ல ஒருவர் கூட அணியில் இல்லை. ஒரு வீரர் 50 பந்துகள் கூட விளையாடவில்லை. நாம் 50 ரன்கள் பற்றி பேசுகிறோம் ஆனால் ஒருவர் கூட 50 பந்துகள் இரண்டாவது இன்னிங்சில் விளையாடவில்லை” என்று கூறி இருக்கிறார்.






