இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 2027 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்றால், ராகுல் டிராவிட் தான் விளையாடும் காலத்தில் செய்த ஒரு முக்கிய விஷயத்தை செய்தால் மட்டுமே முடியும் இல்லையென்றால் கடினம் என்று ஆகாஷ் சோப்ரா கூறி இருக்கிறார்.
நடந்து முடிந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் கைப்பற்றியது. அடுத்தடுத்த இரண்டு ஆண்டுகளில் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் இரண்டு ஐசிசி தொடர்களை ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் தான் ஓய்வு பெறப்போவதில்லை எனவும் யாரும் வதந்தி பரப்ப வேண்டாம் எனவும் கூறியிருந்தார்.
இது குறித்து ஆகாஷ் சோப்ரா பேசும் பொழுது “ரோஹித் சர்மா பத்திரிகையாளர் சந்திப்பில் இறுதியாக வெளியேறுவதற்கு முன்பாக தான் தொடர்ந்து விளையாடுவேன் ஓய்வு பெறப்போவதில்லை என்று கூறியிருந்தார். இது ஒரு நியாயமான விஷயம். எனவே அவர் 2027 உலகக்கோப்பை தொடரில் விளையாடுவாரா? நான் விளையாடுவார் என்று நினைக்கிறேன். ஆனால் இதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது!”
“பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் கூறிய கருத்துப்படி எடுத்துக் கொண்டால் அவர் தொடர்ந்து விளையாடுவார் என்பதற்கு அது எந்த வித உத்தரவாதத்தையும் அளித்து விடாது. இன்னும் இரண்டு ஆண்டு காலம் தொடர்ந்து விளையாட வேண்டும் என்பது மிகவும் கடினம். ஏனென்றால் தங்கம் இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து நெருப்பில் மூழ்க வேண்டும். ஏற்கனவே தூய தங்கமான ரோஹித் சர்மா நாளுக்கு நாள் இளமையாக மாட்டார் என்பது முக்கியம்”
” ராகுல் டிராவிட் விளையாடிய காலகட்டத்தில் அவர் இளமையாக இருந்த போது உடல் பயிற்சி செய்ததை விட கொஞ்சம் வயதான பிறகு அதிக உடற்பயிற்சி செய்வது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் தான் தொடர்ந்து இந்திய அணியில் விளையாட வேண்டும் என்றால் இதை செய்தாக வேண்டும் என்று கூறியிருந்தார். எனவே ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி அடுத்த இரண்டு ஆண்டுகள் இத்தகையான ஒழுக்கத்தை பின்பற்றினால் மட்டுமே விளையாட முடியும்”
இதையும் படிங்க : எது ஈசியா? பெரிய கஷ்டங்க.. படுத்தி எடுத்துட்டாங்க – பும்ரா மனைவிக்கு கேஎல் ராகுல் பதில்
“உலகக் கோப்பை அடுத்து தென் ஆப்பிரிக்காவில் நடைபெற இருக்கிறது. எங்களின் இரண்டு ஜாம்பவான் வீரர்கள் இருக்கிறார்கள் மேலும் அணியில் சில ராக் ஸ்டார்கள் இருக்கிறார்கள். இது சுவாரசியமான ஒன்றாக இருக்கப் போகிறது. இருப்பினும் சர்வதேச தொழில் முறை கிரிக்கெட்டில் இரண்டு ஆண்டுகள் என்பது மிகவும் நீளமானது. எனவே முடிவுகளை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.