ஜெய்ஸ்வாலுக்கு நடந்தது கேலிக்கூத்து மட்டும் இல்ல அநியாயம்.. நிச்சயம் இதை செய்ய போறாரு – ஆகாஷ் சோப்ரா கருத்து

0
58
Jaiswal

இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஜெய்ஸ்வால் தற்போது ஒரு வடிவத்தில் மட்டுமே விளையாடி வருவது கேலிக்கூத்தானது என இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்திருக்கிறார்.

இந்திய கிரிக்கெட்டில் ஜெய்ஸ்வால் அறிமுகமான காலகட்டத்தில் அவர் மூன்று வடிவத்திலும் விளையாடக்கூடிய வீரராக மாறுவார் என பலரும் கூறியிருந்தார்கள். மேலும் இந்திய கிரிக்கெட்டில் விராட் கோலியின் இடத்தை அவரை பிடிப்பார் என்றும் கூறப்பட்டது. இப்படியான நிலையில் யாரும் எதிர் பார்க்காத வகையில் அவர் டெஸ்ட் கிரிக்கெட் மட்டுமே விளையாடி வருகிறார்.

- Advertisement -

அவருக்கு செய்யப்பட்ட அநீதி

இந்த நிலையில் விராட் கோலியின் இடத்தை இந்திய கிரிக்கெட் நிர்வாகம் வில்லுக்கு கொடுத்து தொடர்ந்து அவருக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. டி20 அணியில் ஜெய்ஸ்வால் விளையாட வேண்டிய இடத்தில் தற்பொழுது கில் விளையாடுவது அவருக்கு செய்யப்பட்ட அநீதியாக அமைந்திருக்கிறது.

இது குறித்து ஆகாஷ் சோப்ரா பேசும் பொழுது ” ஜெய்ஸ்வால் சுவாரசியமான ஒரு வீரர். அவர் தற்போது இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் மட்டுமே விளையாடி வருகிறார். ஆனால் அவர் மூன்று வடிவத்திலும் விளையாட வேண்டிய வீரர். அவர் ஒரு வடிவத்தில் மட்டுமே விளையாடுவது கேலிக்கூத்தானது மேலும் அது அவருக்கு செய்யப்பட்ட அநீதி”

- Advertisement -

உண்மை நிலவரம் இதுதான்

“இவர் விஷயத்தில் உண்மை என்னவென்றால் அடுத்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வந்து ரன்கள் எடுப்பார். இவர் அப்படிப்பட்ட வீரராகவே இருந்து வந்திருக்கிறார். அதைத்தொடர்ந்து இந்திய ஒருநாள் அணியில் இவருக்கு இடம் கிடைக்கும். இவர் ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரில் இந்திய அணியில் இடம் பெறுவார்”

இதையும் படிங்க : கம்பீர் கிடையாது.. இந்த இந்திய முன்னாள் வீரர் தான் என் பேட்டிங் சிறப்பாக காரணம் – வாஷிங்டன் சுந்தர் பேச்சு

“அதே சமயத்தில் இந்திய டி20 அணியில் இவருக்கு இடம் கிடைக்காது. இந்திய அணி ஆசியக் கோப்பையை வென்றால் அந்த அணியில் பெரிய மாற்றங்களை செய்ய விரும்ப மாட்டார்கள். இருந்தாலும் கூட இந்திய அணி டி20 உலக கோப்பைக்கு முன்பாக 15 டி20 போட்டிகளில் விளையாடுவதால், சில நேரங்களில் இவர் 15 பேர் கொண்ட அணியில் இடம் பெறலாம்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -